அசோக் சூட்டா ஐடி துறையில் இருப்பவர்கள் நிச்சயம் இந்த பெயரினை அறிந்திருக்கலாம். ஐடி துறையில் முன்னணி நிறுவனமாக இருந்து வரும் ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் டெக்னாலஜி நிறுவனத்தின் தலைவராவர்.
இந்த நிறுவனம் நடப்பு நிதியாண்டில் மட்டும் முதலீட்டாளார்களுக்கு இரு மடங்கு லாபம் கொடுத்துள்ளது.
இது தொடர்ந்து ஐடி துறையில் நிலவி வரும் வளர்ச்சி விகிதத்திற்கு மத்தியில் இப்பங்கின் விலையானது, தொடர்ந்து உச்சம் தொட்டு வருகின்றது.
தென் மாவட்டங்களில் ஐடி பூங்காக்கள் நிறுவப்படுமா.. தமிழக பட்ஜெட்டில் முக்கிய எதிர்பார்ப்பு.. !
ஓராண்டு நிலவரம்
நடப்பு நிதியாண்டில் இதுவரையில் இப்பங்கின் விலையானது 115% ஏற்றம் கண்டுள்ளது. இது கடந்த மார்ச் 31, 2021ல் 540.10 ரூபாயாக இருந்த நிலையில், மார்ச் 17, 2022 நிலவரப்படி இப்பங்கின் விலையானது 1159.45 ரூபாயாக இருந்தது. இதே காலகட்டத்தில் சென்செக்ஸ் குறியீடானது 17% மட்டுமே ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உச்சம் தொட்ட லாபம்
டிசம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் வளர்ச்சி விகிதமானது 16.1% அதிகரித்து, 48.92 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 42.15 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே வருவாய் விகிதமானது டிசம்பர் காலாண்டில் 47.2% அதிகரித்து, 283.94 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 192.84 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐபிஓ-வில் இருந்து என்ன நிலை?
இப்பங்கின் விலையானது அதன் பங்கு வெளியீட்டில் இருந்து பார்க்கும்போது கிட்டதட்ட 600% ஏற்றத்தில் காணப்படுகிறது. இதன் ஐபிஓ விலையானது 166 ரூபாயாகும். ஐடி துறையில் தொடர்ந்து அதிகரித்து வரும் தேவைக்கு மத்தியில், இந்த நிறுவனத்தின் வளர்ச்சி விகிதமானது தொடர்ந்து உச்சம் தொடலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இப்பங்கின் விலையானது அதிகரிக்கலாம் என்றே நிபுணர்கள் கணித்து வருகின்றனர்.
டிஜிட்டல் சேவை
இந்த டெக்னாலஜி நிறுவனத்தின் வருவாய் விகிதமானது 96% அதன் டிஜிட்டல் வணிகத்தில் இருந்தே கிடைக்கிறது. இந்த நிறுவனம் டிஜிட்டல் டிரான்ஸ்பர்மேஷன் மற்றும் ஐடி ஆலோசனை, சேவைகளை வழங்கி வரும் ஒரு ஐடி நிறுவனமாகும். இது மிகப்பெரிய தரவு, அனலிடிக்ஸ், கிளவுட் சேவை, மொபைலிட்டி, பாதுகாப்பு உள்ளிட்ட திறன்களையும் கொண்டுள்ளது.
பங்கு வெளியீட்டு நிலவரம்
இந்த நிறுவனம் கடந்த செப்டம்பர் 2020ல் தனது பங்கு வெளியீட்டினை செய்தது. அப்போது 165 – 166 ரூபாய் என்ற விலையிலேயே பங்குகள் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட போதே 111% பிரீமிய விலையில் பட்டியலிடப்ப நிலையில் பி.எஸ்.இயில் 351 ரூபாயாக தொடங்கியது. இதே என்.எஸ்.யில் 350 ரூபாயாகவும் தொடங்கியது.
இன்றைய விலை நிலவரம்
தற்போது 2.08 மணி நிலவரப்படி பி.எஸ்.இயில் இப்பங்கின் விலையானது 0.55% குறைந்து, 1153.10 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 1176.75 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 1150 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 1580.80 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 510 ரூபாயாகும்.
இதே என்.எஸ்.இ-யில் இப்பங்கின் விலையானது 0.40% குறைந்து, 1154.05 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 1177.25 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 1150 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 1580 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 510 ரூபாயாகும்.
600% jump from issue price, 115% in 12 months: do you had this multibagger stock?
600% jump from issue price, 115% in 12 months: do you had this multibagger stock?/இரு மடங்கு லாபத்தை அள்ளிக் கொடுத்த ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ்.. இனி என்ன செய்யலாம்.. வாங்கியிருக்கீங்களா?