இலங்கையின் கொரோனா தொற்றினால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 24 ஆயிரத்து 676 ஆக உயர்வடைந்துள்ளதாகவும், நேற்றைய தினம் (20) 84 பேர் சிகிச்சை நிலையங்களில் இருந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த வார இறுதியில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 470 ஆக காணப்பட்டது. இது தற்போது 300 ஐ விட குறைவடைந்து உள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.
நேற்றைய தினம் 236 பேருக்கு தொற்றுதி செய்யப்பட்டுள்ளதுடன், அதற்கு முந்தைய நாள் 238 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சனிக்கிழமை (19) அன்று 3 ஆயிரத்து 144 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மற்றும் 1 ஆயிரத்து 154 பேருக்கு ஆன்டிஜென் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது..
ஜனவரி 1 முதல், 70 ஆயிரத்து 394 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 இலட்சத்து 89 ஆயிரத்து 90 பேர் கடந்த புத்தாண்டுடன் தொடர்புடைய தொற்றாளர்களாகவும், 82 ஆயிரத்து 785 பேர் பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடைய தொற்றாளர்களாகவும், 9 ஆயிரத்து 154 சிறைச்சாலைக் கொத்தணி தொற்றாளர்களாகவும் கணக்கிடப்பட்டுள்ளனர். திவுலப்பிட்டிய கொத்தணியுடன் தொடர்புடைய வர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 59 .
வெளிநாட்டிலிருந்து வருகை தந்து தொற்றுக்குள்ளானவர்களில் 7 ஆயிரத்து 237 பேர் இலங்கையர்களாகவும், 328 பேர் வெளிநாட்டவர்களாகவும் உள்ளனர்.
இன்று வரை மொத்தம் 6 இலட்சத்து 58 ஆயிரத்து 197 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் கொழும்பை சேர்ந்த 1 இலட்சத்து 37 ஆயிரத்து 669 பேரும், கம்பஹாவை சேர்ந்த 1 இலட்சத்து 13 ஆயிரத்து 730 பேரும், களுத்துறையை சேர்ந்த 57 ஆயிரத்து 918 பேரும், குருநாகலை சேர்ந்த 31 ஆயிரத்து 262 பேரும் உள்ளடங்குவர்.
தொற்றின் மூன்றாவது அலையின் போது, கொழும்பை சேர்ந்த 1 இலட்சத்து 5 ஆயிரத்து 372 பேருக்கும், கம்பஹாவை சேர்ந்த 95 ஆயிரத்து 196 பேரும், களுத்துறையை சேர்ந்த 50 ஆயிரத்து 860 பேருக்கும் தெற்று உறுதி செய்யப்பட்டது.
தற்போது, 17 ஆயிரத்து 90 பேர் அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தப்படுள்ளதுடன் 854 பேர் தனிமைப்படுத்தல் முகாம்களில்; உள்ளனர்.