உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் கல்வியை தொடர்வது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ரஷ்யாவுடனான போர் காரணமாக உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்பது குறித்து பொது நல வழக்கு தொடரப்பட்டது. அதன் விசாரணையில், உக்ரைனில் இருந்து 22 ஆயிரத்திற்கு 500 இந்தியர்கள் மீட்கபட்டுள்ளதாகவும், மிகப் பெரிய மீட்பு பணி முடிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
உக்ரைனில் மேலும் இந்தியர்கள் சிக்கி இருப்பதற்கான தகவல்கள் ஏதும் இல்லை என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டது. இதனை பதிவு செய்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு, மாணவர்களை மீட்க கோரிய வழக்கை முடித்து வைத்தது.