உக்ரைனின் சுமி பகுதியில் உள்ள சுமிகிம்ப்ரோம்( Sumykhimprom) ரசாயன தொழிற்சாலையில் இருந்து அதிக அளவிலான அம்மோனியா வெளியேறி வருவதாக அப்பகுதியின் பிராந்திய ஆளுநர் Dmytro Zhyvytskyy தெரிவித்துள்ளார்.
உக்ரைன்-ரஷ்யா போரானது உச்சகட்டத்தை நெருங்கி வரும் சூழலில், உக்ரைனின் முக்கிய நகரங்களை சிலவற்றை கைப்பற்றியும், பெரும்பாலான நகரங்களை சுற்றிவளைத்தும் ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
அந்தவகையில் ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் வடகிழக்கு பகுதியான சுமி நகரின் சுமிகிம்ப்ரோம்( Sumykhimprom) ரசாயன தொழிற்சாலையில் இருந்து (02:30 GMT) அம்மோனியா கசிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை அப்பகுதியின் பிராந்திய ஆளுநர் Dmytro Zhyvytskyy-யும் உறுதிப்படுத்தியுள்ளார், மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சுமி நகரில் அமைந்துள்ள சுமிகிம்ப்ரோம்( Sumykhimprom) ரசாயன தொழிற்சாலையில் அம்மோனியா அதிக அள்வு வெளியேறிவருவதாகவும், இது தொழிற்சாலையை சுற்றி அமைந்துள்ள 5 கிலோமீட்டர் தூரம் வரை மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த அம்மோனியா கசிவு எவ்வாறு ஏற்பட்டது என்ற எந்த தகவலையும் அவர் அந்த அறிவிப்பில் குறிப்பிடவில்லை.
ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைகிறதா உக்ரைன்? 26வது நாள் போர் தாக்குதல் மத்தியில் எடுத்த முடிவு