உக்ரைனில் கொள்ளையடித்த ரஷ்ய வீரர்கள்! சிசிடிவி-யில் சிக்கிய காட்சி



 உக்ரைன் கடைகளில் ரஷ்ய ராணுவ வீரர்கள் கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷியா இன்று 26-வது நாளாக போர் தொடுத்து வருகிறது.

உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் ஆகிய நகரங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், உக்ரேனிய கடை ஒன்றில் புகுந்த ரஷ்யா இராணுவ வீரர்கள், அங்கிருந்து பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இச்சம்பவம் அக்கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராவில் பாதிவாகியுள்ளது.

எரிபொருள் நிலையத்திற்கு ராணுவ வாகனத்தில் வந்திறங்கும் ரஷ்ய வீரர்கள், நிலையத்தில் இருந்த கடைக்குள் புகுந்து பொருட்களை கொள்ளையடித்து செல்லும் காட்சி அங்கிருந்த சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் உக்ரைனின் எந்த பகுதியல் நடந்தது என்பது தெரியவில்லை.

மற்றொரு வீடியோவில், ஆயுதங்களுடன் கடைக்கு நுழைந்த ரஷ்ய வீரர்கள், தங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துச் செல்கின்றனர்.

குறித்த சம்பவம் உக்ரைனின் கெர்சன் நகரில் நடந்ததாக கூறப்படுகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.