உக்ரைன் மீது 2வது முறையாக ஹைபர்சோனிக் வகை ஏவுகணையை செலுத்தியதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
ரஷ்ய பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஒலியை விட ஐந்து மடங்கு வேகமாக செல்லக்கூடிய கேலிபர் வகை ஏவுகணையை உக்ரைன் தலைநகர் கீவ்வின் அருகில் செலுத்தியதாக தெரிவித்துள்ளார்.
கிரிமியா கருங்கடல் பகுதியில் இருந்து செலுத்தப்பட்ட ஏவுகணை கீவ் அண்டை நகரும், உக்ரைன் ராணுவத்தின் தளவாடங்கள் பழுது பார்க்கும் பட்டறையுமான Nizhyn plant-ஐ தாக்கி அழித்ததாக தெரிவித்துள்ளார்.
ராணுவ தாக்குதல்களை தீவிரப்படுத்தக் கோரி அதிபர் புதின் உத்தரவிட்டதை அடுத்து கேலிபர் வகை ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.