உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலால் இதுவரை ஒரு கோடி பேர் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறி உள்ளதாக ஐ.நா அகதிகள் பிரிவு இயக்குனர் Filippo Grandi தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், இந்த எண்ணிக்கையில் உக்ரைன் நாட்டிற்குள் இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் அண்டை நாடுகளுக்கு தப்பிச் சென்றவர்களும் அடங்குவர் என்றும் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் Luhansk பகுதியில் உள்ள முதியோர் இல்லம் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியிருப்பது அங்கு மனிதாபிமான நடவடிக்கைகள் மோசமடைந்து வருவதையே காட்டுவதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.