டேராடூன்:
உத்தரகாண்ட் மாநிலத்தில் 70 சட்டசபை தொகுதிகளில் 47 இடங்களைக் கைப்பற்றி பா.ஜ.க. ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. காங்கிரஸ் 19 இடங்களைப் பெற்று 2- வது இடத்தைப் பிடித்துள்ளது.
இதற்கிடையே, உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர்.
டேராடூனில் உள்ள விதான் சபாவில் பதவியேற்பு விழா நடைபெற்றது. புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பன்சிதர் பகத் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. அதில் பா.ஜ.க. சட்டசபை கட்சி தலைவராக (முதல்-மந்திரி) தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என அம்மாநில பா.ஜக தெரிவித்துள்ளது.
புஷ்கர் சிங் தாமி எம்.எல்.ஏ.வாக இல்லாத நிலையில், அடுத்த 6 மாதத்தில் அவர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும்.
உத்தரகாண்ட் மாநில முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி, காதிமா சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் புவன் சந்திர கப்ரியிடம் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்…கேரள லாட்டரியில் சென்னையை சேர்ந்த வங்கி பெண் அதிகாரிக்கு ரூ.25 லட்சம் பரிசு