எத்தனால் நிரப்பும் நிலையங்களைத் திறக்க அரசு முடிவு – நிதின் கட்கரி

எரியாற்றல் தேவைக்கு எத்தனாலைப் பயன்படுத்துவது குறித்துப் பல்வேறு அமைச்சகங்களுடன் பேசி வருவதாக மத்தியச் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

பல்வகை எரிபொருள்களால் இயங்கும் எஞ்சின்கள் கொண்ட வாகனங்கள் விற்பனைக்கு வரும் என்றும், எத்தனால் நிரப்பும் உயிரி எரிபொருள் நிலையங்களைத் திறக்க அரசு முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தொலைத்தொடர்புக் கோபுரங்களின் மின்சார ஜெனரேட்டர்களில் டீசலுக்குப் பதில் எத்தனாலைப் பயன்படுத்தவும், விமானங்களுக்கு எத்தனாலைப் பயன்படுத்தவும் அரசு ஆராய்ந்து வருவதாக கூறினார்.

இது குறித்து விமானப்படைத் தளபதி, பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் ஆகியோருடன் பேசி வருவதாகவும் நிதின் கட்கரி தெரிவித்தார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.