தற்போதைய வாழ்க்கை முறையில் பலருக்கும் எலும்புகள் இளம் வயதிலேயே வலுவிழக்கத் தொடங்கி விடுகிறது.
இதனால், பின்னாளில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
எலும்புகள் இளம் வயதிலேயே பலவீனமாக இருப்பதற்கான காரணங்கள் என்ன?
சோம்பேறித்தனம்
சோம்பல் அதிகம் இருந்தால், உடலின் இயக்கம் குறைகிறது. உங்கள் எலும்புகளை வலுப்படுத்தவதில், உடல் இயக்கம் முக்கிய பங்களிக்கிறது. எனவே, முடிந்த அளவு முதலில் சோம்பலை அகற்றி, சுறுசுறுப்பாக இருக்க முயற்சி செய்யவும்.
உப்பு
அதிக உப்பை சாப்பிடக்கூடாது, ஏனென்றால் அதிக உப்பை சாப்பிட்டாலும், உங்கள் உடலில் உள்ள எலும்புகள் பலவீனமடையத் தொடங்கும். உப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால் எலும்புகளின் அடர்த்தியைக் குறையலாம் என்று நம்பப்படுகிறது.
புகைப்பிடிப்பது
எலும்பு ஆரோக்கியத்தை பொறுத்தவரை புகைபிடிப்பவர்களும் மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அதனால் உங்கள் எலும்புகள் பாதிக்கப்படும். புகைபிடித்தல் உங்கள் நுரையீரலை மட்டுமல்ல, உங்கள் எலும்புகளையும் பாதிக்கிறது என்று நம்பப்படுகிறது.
சூரிய ஒளி முக்கியம்
இன்றைய வாழ்க்கை முறையில், நம் உடலின் மீது சூரிய ஒளி படும் வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது. பலரின் உடலில் வைட்டமின்-டி குறைபாடு உள்ளது. என்ன தான் செயற்கை மருந்து வகைகளை சாப்பிட்டாலும், வலுவான எலும்புகளுக்கு சூரியனில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி மிகவும் முக்கியமானது.
தூக்கமின்மை
நிம்மதியான தூக்கம் என்பது மனிதனுக்கு மிக முக்கியம். போதுமான தூக்கம் இல்லாததாலும் எலும்புகள் பலவீனமடைவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்