ஏர்டெல் Vs ஜியோ Fiber broadband திட்டங்கள் – 4,000 GB வரை டேட்டா பலன்கள்!

ஏர்டெல், ஜியோ போன்ற முன்னணி டெலிகாம் நிறுவனங்கள், அதிவேக Fibernet Broadband இணைப்பை எளிய ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களுடன் வழங்குகின்றன. இன்று இதில் உங்களுக்கு ஏற்ற சிறந்த திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

குறைந்த விலை முதல் பிரீமியம் திட்டங்கள் வரை இரு நிறுவனங்களும் பயனர்களுக்கு வழங்குகின்றன. இந்த திட்டங்களில் உங்களுக்கு ஏற்ற திட்டங்களை தேர்வு செய்து டேட்டா பலன்களை அனுபவிக்கலாம்.

ஜியோ Fiber திட்டங்கள்:

ஜியோ ஃபைபரின் ரூ.300 குறைந்த விலை திட்டத்தில் உங்களுக்கு 30 Mbps வேகத்தில் மொத்தம் 3,300GB டேட்டா வழங்கப்படும். இந்த திட்டத்தில் OTT நன்மைகள் எதுவும் வழங்கப்படவில்லை. JioFiber-இன் ரூ.699 திட்டமும் 3,300 GB டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் 100 Mbps வேகத்தில் டேட்டா வழங்கப்படுகிறது. இதில் பயனர்களுக்கு OTT நன்மைகள் எதுவும் கிடைக்காது.

இனி நீங்க ஏமாத்த முடியாது – Netflix எடுத்த அதிரடி முடிவு!

ஜியோவின் ரூ.999 திட்டத்தில் 150 Mbps வேகத்தில் 3,300GB இணையத்தைப் பெறுவீர்கள். நீங்கள் OTT ரசிகராக இருந்தால், இந்தத் திட்டம் உங்களுக்கு நல்ல தேர்வாக இருக்கலாம். ஏனெனில், இந்த திட்டத்தில் நீங்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோ உள்பட 16 OTT பயன்பாடுகளுக்கான அணுகலைப் பெறுவீர்கள்.

மேலும், ஒரு அதிவேகத் திட்டத்தை ஜியோ பயனர்களுக்கு வழங்குகிறது. JioFiber இன் மிகவும் விலையுயர்ந்த ரூ.2,499 திட்டத்தில், உங்களுக்கு 500 Mbps வேகத்தில் 4,000 GB டேட்டா வழங்கப்படுகிறது. இது பெரும்பாலான OTT பயன்பாடுகளுக்கான அணுகலையும் வழங்குகிறது. உங்களுக்கு அதிக இணைய வேகம் தேவைப்பட்டால், JioFiber இன் ரூ.2,499 உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கலாம்.

ஏர்டெல் Fiber திட்டங்கள்

ஏர்டெல் நிறுவனத்தின் மலிவான ஃபைபர் திட்டம் ரூ.499 முதல் தொடங்குகிறது. இந்த திட்டத்தில் 40 Mbps வேகத்தில் 3,300 GB டேட்டா, 7 OTT தளங்கள் மற்றும் ஐந்து ஸ்டுடியோ பயன்பாடுகளுக்கான அணுகலைப் பெறுவீர்கள். ஏர்டெல்லின் அடுத்த திட்டமானது உங்களுக்கு 3,300 ஜிபி டேட்டா, ஏழு OTT தளங்களின் அணுகல் மற்றும் ஐந்து ஸ்டுடியோ பயன்பாடுகள் ஆகியவற்றை வழங்குகிறது. 200 Mbps வேகத்தில் டேட்டா வழங்கும் இந்த திட்டத்தின் விலை ரூ.799 ஆகும்.

Apple இப்படி செஞ்சிருக்கக் கூடாது – பயனர்கள் விரும்பிய iPhone SE-ஆ இது!

ஏர்டெல் ரூ.999 திட்டத்தில், பயனர்கள் 200 Mpbs வேகத்தில் 3,300GB டேட்டாவை அனுபவிக்கலாம். இதில் பல OTT மற்றும் ஏர்டெல் ஸ்டுடியோ பயன்பாடுகளின் அணுகலும் கிடைக்கிறது. ஏர்டெல்லின் விலையுயர்ந்த திட்டம் ரூ.3,999 ஆகும். இது உங்களுக்கு 1Gpbs இணைய வேகத்தை வழங்குகிறது. மேலும், பல OTT மற்றும் ஸ்டுடியோ பயன்பாடுகளையும் இத்திட்டம் உள்ளடக்கி உள்ளது.

ஏர்டெல் அல்லது ஜியோ ஃபைபர் இணைப்புகளை பெற பயனர்கள் இடமிருந்து Installaiton கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. ஏர்டெல் திட்டத்தை எடுக்கும்போது வாடிக்கையாளர்கள் கூடுதலாக ரூ.1000 செலுத்த வேண்டும். ஜியோ இணைப்புக்கு கட்டணமாக ரூ.1,500 வசூலிக்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.