திருமலை திருப்பதி தேவஸ்தானம்
ஆற்றல் சேமிப்பு மற்றும் செயல்திறன் நடவடிக்கைகளை பெரிய அளவில் ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளது. இந்த முன்முயற்சிகளால் அது பெறும் பணப் பலன்களைத் தவிர, 2070ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டில் திருமலை திருப்பதியும் தனது பங்களிப்பை அளிக்கவுள்ளது.
திருமலை
திருப்பதி
தேவஸ்தானம், AP State Energy Efficiency Development Corporation Limited (APSEEDCO) உடன் இணைந்து தனது கட்டிடங்களில் உள்ள 5,000 சீலிங் ஃபேன்களை, பிரஷ்லெஸ் டைரக்ட் கரண்ட் (brushless direct current – BLDC) மின்விசிறிகளுடன் மாற்றுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடிவு செய்துள்ளது. இந்த அதிக
ஆற்றல் திறன்
கொண்ட மின்விசிறிகள் மூலம் ஆண்டுக்கு ரூ.62 லட்சம் சேமிக்கப்படுவதுடன், சுமார் 0.88 மில்லியன் யூனிட் மின்சாரத்தையும் சேமிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
BLDC மின்விசிறிகளைத் தவிர, ஆற்றல் திறன் கொண்ட பம்ப் செட்கள், LED விளக்குகள் மற்றும் சூரிய கூரை அமைப்புகள் போன்றவற்றை நிறுவுவதற்கான முயற்சிகளிலும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஈடுபடவுள்ளதாக தெரிகிறது.
நிகர பூஜ்ஜிய ஆற்றல் நுகர்வு அடைய, ஆற்றல் திறன் உத்திகளைப் பின்பற்றுவதை நோக்கமாகக் கொண்ட, நிகர பூஜ்ஜிய ஆற்றல் சாத்தியக்கூறு ஆய்வை நடத்துவதற்கு, பீரோ ஆஃப் எனர்ஜி எஃபிஷியன்சி (BEE) தேர்ந்தெடுத்த நாட்டில் உள்ள ஐந்து இடங்களில் திருப்பதியும் ஒன்று என்பது கவனிக்கத்தக்கது.
ஆந்திரப் பிரதேசத்தின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டுக் கழகம் (NREDCAP) போன்ற ஏஜென்சிகளின் ஆதரவுடன் திருப்பதியில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகளிலும், திருமலையில் உள்ள தேவஸ்தான கட்டிடங்களிலும் 2.2 MW சூரிய சக்தி அமைப்புகளை தேவஸ்தானம் நிறுவவுள்ளது. ஒரே நேரத்தில் திருமலை மற்றும் திருப்பதியில் மின்சார இயக்கத்தை தேவஸ்தானம் ஊக்குவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி கூறுகையில், சுற்றுச்சூழலுக்கு ஆதரவான செயல்களை திருமலை தேவஸ்தானம் உறுதியாக நம்புகிறது. எனவே, ஆற்றல் திறன் திட்டங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஆற்றல் திறன் களத்திலும் ஒரு முன்மாதிரியாக இருக்க திருமலை விரும்புகிறது.” என்றார்.
பீரோ ஆஃப் எனர்ஜி எஃபிஷியன்சியின் (BEE) நிதி ஆதரவுடன், எல்.ஈ.டி விளக்குகள், BLDC மின்விசிறிகள், ஆற்றல் திறன் வாய்ந்த பம்ப் செட்டுகள் மற்றும் பிற சாதனங்களை ஆந்திர மாநில எரிசக்தி பாதுகாப்பு மிஷன், திருப்பதியில் செயல்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.