புதுடெல்லி: இந்தியா தனது வெளியுறவுக் கொள்கை உலகம் முழுவதும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது, ஒருவர் அதைப் பாராட்டியதாகக் கூறுவது தவறாகும் என்று ஹர்ஷ் வர்தன் சிரிங்கலா கூறினார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில் ‘‘எப்போதும் தனிப்பட்ட வெளியுறவு கொள்கையை பின்பற்றுவதற்காக இந்தியாவை பாராட்டுகிறேன். இந்தியா தற்போது அமெரிக்காவுடன் நல்ல நட்புடன் உள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் அடங்கிய, ‘குவாட்’ அமைப்பிலும் இந்தியா உள்ளது.
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா.வில் மூன்று தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இந்தியா ஒதுங்கி இருந்தது. ஆனால் பொருளாதார தடை விதித்துள்ள ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா வாங்குகிறது.
அதேசமயம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. இதற்கு காரணம் நாட்டு மக்களின் நலனுக்கானதாக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை உள்ளது. அந்த நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் ராணுவம் தலையிடுவது இல்லை. இதனால் அந்நாடு சுதந்திரமான முடிவுகளை எடுக்கிறது’’ எனக் கூறினார்.
இதுகுறித்து இந்தியா தரப்பில் கருத்து தெரிவித்துள்ளது. இந்தியா தனது வெளியுறவுக் கொள்கை முன்முயற்சிகளுக்காக உலகம் முழுவதும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது, ஒருவர் அதைப் பாராட்டியதாகக் கூறுவது தவறாகும் என்று ஹர்ஷ் வர்தன் சிரிங்கலா கூறினார்.
வெளியுறவுச் செயலர் ஹர்ஷ் வர்தன் சிரிங்கலா கூறியதாவது:
இந்தியா தனது வெளியுறவுக் கொள்கை முன்முயற்சிகளுக்காக உலக அளவில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. அதை ஒருவர் பாராட்டியதாகக் கூறுவது தவறாகும். சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை இந்தியா பின்பற்றுகிறது. இதற்காக உலகம் முழுவதுமே பாராட்டுக்களை பெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.