மத்திய அரசின் உற்பத்தி சார்ந்த ஊக்கச் சலுகை திட்டத்தின் கீழ் முதல் ஆண்டிலேயே சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்களை ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்ற நிதியாண்டில் இந்தியாவின் 10 முதல் 15 சதவீதம் வரையிலான ஐபோன் தேவையை மட்டுமே பூர்த்தி செய்த ஆப்பிள் நிறுவனம் , உற்பத்தி சார்ந்த ஊக்கச் சலுகை திட்டத்தின் மூலம் சலுகை பெற்ற பின், 75 முதல் 80 சதவீத உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் விஸ்ட்ரான், ஃபாக்ஸ்கான் மற்றும் பெகட்ரான் ஆகிய ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் ஐபோன்கள் தயாரிக்கப்படும் நிலையில், SE 2020, ஐபோன் 11 மற்றும் 12 ஆகிய மாடல்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுவதாக கூறப்படுகிறது.