கன்னியாகுமரி
கன்னியாகுமரியில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி தரைப் பாலம் அமைக்கப்பட உள்ளது
கன்னியாகுமரியில் இந்தியப் பெருங்கடல், அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடா ஆகிய மூன்று கடல்களும் கலக்கின்றன. இங்குள்ள பாறையில் விவேகானந்தர் தியானம் செய்து ஞானம் பெற்றுள்ளார். அந்த பாறையில் த் அற்போது விவேகானந்தர் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
விவேகானந்தர் மண்டபத்துக்கு அருகே உள்ள மற்றொரு பாறையில் தமிழக அரசால் அப்போதைய முதல்வர் மு கருணாநிதியின் விருப்பப்படி திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த இரு இடத்தையும் படகின் மூலம் சென்று கண்டு களித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசு விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவ்ள்ளுவர் சிலையை இணைக்கக் கண்ணாடி தரை கொண்ட பாலம் ஒன்றை அமைக்க உள்ளது. தமிழக சுற்றுலாத்தலங்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இந்த பாலம் அமைக்கப்பட உள்ளது.
இந்த பாலம் ரூ.28 கோடி மதிப்பில் அமைய உள்ளது. இதற்கான வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழக அரசின் சுற்றுலா மேம்பாட்டுத்துறை இதற்கான ஒப்பந்தப் புள்ளியை அளிக்கக் கோரி விளம்பரம் வெளியிட்டுள்ளது.