துளசி, ஆயுர்வேத மருந்துகளின் குறிப்பிடத்தக்க பகுதியாக அறியப்படும் ஒரு மூலிகை ஆகும். நீரிழிவு மற்றும் இரத்த சர்க்கரையை நிர்வகிக்கவும் அவை பயன்படுத்தப்படலாம்.
துளசி செடியின் இலைகள், தண்டுகள் மற்றும் விதைகள் உண்ணக்கூடியவை. பல இந்திய உணவு வகைகளில் இவை பயன்படுத்தப்படுகின்றன. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, இது பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும்.
பழங்காலத்திலிருந்தே இது ஒரு பிரபலமான மூலிகையாக இருந்தாலும், துளசி நீரிழிவு நோயை நிர்வகிக்கும் என்று கூறப்படுகிறது. பெரும்பாலான சுகாதார வல்லுநர்கள் துளசி’ இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை உறுதிப்படுத்துவதாக உறுதியளிக்கின்றனர்;
துளசி இலைகள் பலவிதமான குணப்படுத்தும் பண்புகளால், வாழ்வின் அமுதம் என்று அழைக்கப்படுகின்றன. மிகவும் பொதுவான சில நோய்களைத் தடுப்பதில் இருந்து, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது, பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளை எதிர்த்துப் போராடுவது வரை – துளசியின் நன்மைகள் ஏராளம்.
இந்த மூலிகை’ கணைய பீட்டா செல் செயல்பாடு மற்றும் இன்சுலின் சுரப்பை மேம்படுத்துவதாகவும், மேலும் தசை செல்கள் மூலம் குளுக்கோஸை உறிஞ்சுவதை மேலும் அதிகரிக்கச் செய்வதாகவும் கூறப்படுகிறது.
துளசி இலைகளில் ஹைப்போகிளிகெமிக் (hypoglycaemic) பண்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது, இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது மற்றும் நீரிழிவு நோயின் சிக்கல்களைத் தடுக்க உதவுகிறது.
நீரிழிவு நோயை இயற்கையாக கட்டுப்படுத்த துளசி இலைகளை எவ்வாறு பயன்படுத்துவது?
ஒவ்வொரு நாளும் சில துளசி இலைகளை மெல்லலாம், அதிலிருந்து அனைத்து நன்மைகளையும் பெறலாம்.
கொதிக்கும் நீரில் சில இலைகளைச் சேர்த்து துளசி தேநீர் தயாரிக்கலாம். சுமார் 2-3 நிமிடங்களுக்குப் பிறகு, தண்ணீரை வடிகட்டி ஒவ்வொரு நாளும் ஒரு கப் குடிக்கவும்.
சில துளசி இலைகளை தண்ணீரில் ஊறவைத்து இரவு முழுவதும் விட்டுவிட்டு, காலையில் வெறும் வயிற்றில் முதலில் துளசி நீரை குடிக்கவும்.
இந்த மூலிகையிலிருந்து அனைத்து நன்மைகளையும் பெற, உங்கள் உணவுகளில் துளசி இலைகளைச் சேர்க்கவும்.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் இந்த முறைக்கு மாறுவதற்கு முன், உங்கள் மருத்துவரை அணுகுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
(இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை மட்டுமே வழங்குகிறது. மேலும் தகவலுக்கு எப்போதும் ஒரு நிபுணர் அல்லது உங்கள் சொந்த மருத்துவரை அணுகவும்.)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“