குறைந்த விலை Oppo A16e ஸ்மார்ட்போன் அறிமுகம் – முழு விவரங்கள்!

ஒப்போ நிறுவனம் அடுதடுத்து ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது. குறைந்த, நடுத்தர மற்றும் பிரீமியம் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன்களை டெக் சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வருகிறது.

அந்தவகையில், இன்று ஒப்போ இந்தியா புதிய
Oppo A16e
4ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனின் தொடக்க விலை ரூ.9,499 முதல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்போ ஏ16இ அம்சங்கள் (Oppo A16e Specifications)

புதிய ஒப்போ ஸ்மார்ட்போனில் 6.52″ (16.55cm) 1600 x 720 பிக்சல்கள் உடன் 60Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட HD+ LCD டிஸ்ப்ளே உள்ளது. இது 480 nits வரை பிரைட்னஸை ஆதரிக்கிறது. இந்த திரையின் அடர்த்தி 269PPI ஆக உள்ளது. இதன் பாதுகாப்பிற்காக Corning glass 3 கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன்
Mediatek Helio
P22 புராசஸர் கொண்டு இயக்கப்படுகிறது. மேலும், 3GB, 4GB LPDDR4X ரேம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டோரேஜ் மெமரியாக eMMC 5.1 32GB, 64GB ஆகிய இரு தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. MicroSD card உதவியுடன் 1TB வரை மெமரியை விரிவுபடுத்தலாம்.

ஒப்போ ஏ16இ கேமரா (Oppo A16e Camera)

குறைந்த விலை ஒப்போ ஸ்மார்ட்போனின் பின்பக்க கேமரா பொருத்தவரை சிங்கிள் அமைப்புடன் வருகிறது. இதில், 13MP f/2.2 5P lens பயன்படுத்தப்பட்டுள்ளது. செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 5MP f/2.4 3P lens கொடுக்கப்பட்டுள்ளது.

ஜியோமேக்னெடிக் சென்சார் (Geomagnetic sensor), லைட் சென்சார் (Light sensor), புராஸிமிட்டி சென்சார் (Proximity sensor), அக்செலெரோமீட்டர் (Accelerometer), கிராவிட்டி சென்சார் (Gravity sensor) ஆகிய சென்சார்கள் ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

என்ன பண்ணி வெச்சிருக்கீங்க iQOO; மண்ட மேல கொண்ட தெரியுது!

ஒப்போ ஏ16இ பேட்டரி (Oppo A16e Battery)

Wi-Fi 5 GHz, Bluetooth 5.0, SBC, AAC, aptX, LDAC ஆடியோ கோடெக், MicroUSB, 3.5mm ஹெட்போன் ஜாக் ஆகிய இணைப்பு ஆதரவும் Oppo ஏ16இ ஸ்மார்ட்போனில் உள்ளது. GPS, AGPS, BeiDou Navigation Satellite System, GLONASS, Galileo போன்ற இருப்பிட சென்சார்களும் இதில் நிறுவப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 4230 mAh/16.28 Wh பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனுடன் சார்ஜர் கொடுக்கப்படுகிறது. எனினும், இதில் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொடுக்கப்படவில்லை.

50MP கேமரா கொண்ட குறைந்த விலை போன் – விற்பனைக்கு வந்த ரியல்மி சி35!

ஒப்போ ஏ16இ விலை (Oppo A16e Price in India)

மிட்நைட் பிளாக், ப்ளூ, வைட் ஆகிய மூன்று வண்ணத் தேர்வுகளில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் 3GB + 32GB வேரியண்டின் விலை ரூ.9,499 ஆகவும், 4GB + 64GB வேரியண்டின் விலை ரூ.11,499 ஆகவும் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய 4ஜி ஸ்மார்ட்போனை வெளியிட்ட ஒப்போ நிறுவனம், அதன் விலை குறித்த விவரங்களை இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போன் Oppo, Flipkart ஆகிய தளங்களில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Read more:
இத மட்டும் செய்யாதீங்க – முடக்கப்படும் Whatsapp கணக்குகள்!
இனி நீங்க ஏமாத்த முடியாது – Netflix எடுத்த அதிரடி முடிவு!
உயிரை காத்த Apple வாட்ச் – ஹரியானாவில் நடந்த உண்மை சம்பவம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.