பனாஜி:
கோவா மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 20 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும், மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்களும் பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரமோத் சாவந்த் பா.ஜ.க. சட்டசபைக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து, கோவா மாநில முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் மீண்டும் பதவியேற்க உள்ளார். சட்டசபைக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், கவர்னர் ஸ்ரீதரன் பிள்ளையைச் சந்தித்து பிரமோத் சாவந்த் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார் .
இதையும் படியுங்கள்…மணிப்பூர் முதல்வராக பிரேன் சிங் பதவி ஏற்றார்