டிக்டாக் வெளியேற்றத்தின் மூலம் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்தது மட்டும் அல்லாமல் அதிகளவிலான முதலீட்டைப் பெற்று ஷாட் வீடியோ மற்றும் சோஷியல் காமர்ஸ் பிரிவில் வேகமாக வளர்ச்சியைப் பதிவு செய்த நிறுவனம் தான் ட்ரெல் (Trell).
ரூபாய் மதிப்பு சரிவு.. ஆர்பிஐ எடுத்த நடவடிக்கை.. 2 வருட சரிவில் அந்நியச் செலாவணி..!
சமீபத்தில் பார்த்பே நிறுவனத்தின் நிறுவனர்களான அஷ்னீர் குரோவர், மாதுரி ஜெயின் குரோவர் ஆகியோர் செய்த நிதியியல் முறைகேடுகள் போலவே, தற்போது ட்ரெல் நிறுவனத்தின் நிறுவனர்கள் நிதியியல் முறைகேடுகளைச் செய்து சிக்கியுள்ளனர்.
ட்ரெல் நிறுவனம்
ட்ரெல் நிறுவனத்தின் நிறுவனர்கள் கடந்த 6 வருடத்தில் சுமார் 45 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை ஈர்த்துள்ளனர். ட்ரெல் நிறுவனத்திஸ் மிரே அசர்ட் வென்சர், H&M, KTB நெட்வொர்க், சாம்சங் வென்சர்ஸ், போசன் RZ கேபிடல் எனப் பல முன்னணி நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளது.
4 நிறுவனர்கள்
இந்த முதலீட்டுப் பணத்தை ட்ரெல் நிறுவனத்தின் நிறுவனர்களான அருண் லோதி, சச்சன், புல்கிட் அகர்வால் மற்றும் ரெப்பா முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளனர் எனக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு உள்ள நிலையில் ட்ரெல் நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் விசாரணைக்கு உத்தரவிட்டனர்.
EY இந்தியா
இதன் அடிப்படையில் EY இந்தியா முதல் கட்ட விசாரணை அடிப்படையில் அறிக்கையை வெளியிட்டுள்ளது, இந்த அறிக்கையில் ட்ரெல் நிறுவனத்தின் நிறுவனர்களான அருண் லோதி, சச்சன், புல்கிட் அகர்வால் மற்றும் ரெப்பா ஆகியோரின் பார்டி தொடர்பான செலவுகள் மற்றும் சில முக்கியமான நிதியியல் முறைகேடுகள் கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளது.
100 மில்லியன் டாலர் முதலீடு
EY இந்தியா-வின் இந்த அறிவிப்பால் ட்ரெல் நிறுவனத்தின் 100 மில்லியன் டாலர் முதலீடு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக ட்ரெல் நிறுவனம் தனது செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காக எவ்விதமான தவறும் செய்யாத ஊழியர்கள் சுமார் 300 பேரை பணிநீக்கம் செய்துள்ளது.
பிரசாந்த் சச்சன்
இதனிடையில் ட்ரெல் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான பிரசாந்த் சச்சன் ட்ரெல் நிறுவனத்தில் வைத்திருந்த மொத்த பங்குகளையும் விற்பனை செய்து விட்டு வெளியேறியுள்ளார். ட்ரெல் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே பிரசாந்த் சச்சன் நவம்பர் 2020ல் AppsForBharat என்ற நிறுவனத்தை உருவாக்கினார். இந்த நிறுவனம் ஆன்லைனின் கடவுள் பக்தி கன்டென்ட்-ஐ உருவாக்கி வருகிறது.
பங்குகள் விற்பனை
இந்த நிறுவனத்திற்காகப் பிரசாந்த் சச்சன் டிசம்பர் 2020 முதல் அக்டோபர் 2021க்குள் வரையில் ட்ரெல் நிறுவனம் வைத்திருந்த பங்குகள் அனைத்தையும் விற்பனை செய்து மொத்தமாக வெளியேறினார். இதனால் ட்ரெல் நிர்வாகக் குழுவிலும், நிர்வாக முடிவுகளிலும் தனக்கு எவ்விதமான ஆதிக்கமும் இல்லை எனக் கூறியுள்ளார். 2020 மத்தியில் இருந்தே மொத்தமாக வெளியேறியுள்ளதாகச் சச்சன் தெகிவத்துள்ளார்.
AppsForBharat நிறுவனம்
பிரசாந்த் சச்சன் ட்ரெல் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே AppsForBharat நிறுவனத்தைத் துவங்கிய காரணத்தால் வெறும் 85000 ரூபாய்க்கு 17 சதவீத AppsForBharat பங்குகளை ட்ரெல் கைப்பற்றியுள்ளது. கடந்த 1.5 வருடத்தில் இரண்டு முதலீட்டுச் சுற்றில் AppsForBharat நிறுவனம் சுமார் 14 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை திரட்டியுள்ளது.
ஊழியர்கள் தவிப்பு
இப்படி ஒருபக்கம் நிதியியல் முறைகேடு, மறுபக்கம் பிரசாந்த் சச்சன் வெறியற்றம், மற்ற நிறுவனர்கள் மீது குற்றச்சாட்டு, 100 மில்லயன் டாலர் முதலீட்டுக்குத் தடை என ட்ரெல் (Trell) சுத்தி சுத்தி அடிவாங்கி வரும் காரணத்தால் ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர். ஏற்கனவே ட்ரெல் நிறுவன ஊழியர்களுக்குப் பல நிறுவனத்தில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Trell financial irregularities, cofounder Sachan sold 100% stake, next round of layoff sooner?
Trell financial irregularities, cofounder Sachan sold 100% stake, next round of layoff sooner? சிக்கியது ட்ரெல், அடுத்தப் பார்த்பே-வா..?! வெளியேறிய பிரசாந்த் சச்சன்.. ஊழியர்கள் தவிப்பு..!