சீனாவில் 133 பயணிகளுடன் போயிங் விமானம் விபத்து: மீட்புக் குழுக்குள் விரைவு

பீஜிங்: சீனாவில் 113 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த போயிங் விமானம் மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழப்பு விவரம் குறித்து உடனடித் தகவல் வெளியாகவில்லை.

இருப்பினும், இந்த விபத்து சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள குவாங்சி மாகாணத்தில் உஸோ நகரின் வெளியே நடந்துள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

போயிங் 737 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம் விழுந்து நொறுங்கியதால் மலைப் பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விபத்து பகுதிக்கு மீட்புக் குழுக்கள் விரைந்துள்ளன.

இதற்கிடையில், சம்பவ இடத்தில் காட்டுத் தீயும் பரவியுள்ளதால் மீட்புப் பணிகளை சீன அரசு திட்டமிட்டு வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.