சென்னையை அடுத்த வண்டலூரில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 8,752 பேர் தேர்வு.!

சென்னையை அடுத்த வண்டலூரில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 8ஆயிரத்து 752பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

500-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்ற மாபெரும் வேலைவாய்ப்பு முகாமை துவக்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேலை வாய்ப்பை பெற்றவர்கள் திறமைகளை வளர்த்து மேலும் முன்னேற வேண்டும் எனவும், வேலை கிடைக்காதவர்கள் சோர்ந்து விடாமல் திறன்களை வளர்த்துக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

முகாமில் 20பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். மாலை வரை நடைபெற்ற முகாமில் 8 ஆயிரத்து 752 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.