புதுச்சேரி-மியாட் மருத்துவமனை சார்பில் இரைப்பை, குடல், மூளை மற்றும் நரம்பியல் சிறப்பு மருத்துவ நிபுணர்கள், வரும் 26ம் தேதி புதுச்சேரிக்கு வந்து, மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளனர்.சென்னை மியாட் மருத்துவமனையின், இரைப்பை மற்றும் குடல் அறுவை சிகிச்சை நிபுணர் பாஸ்கரன், மூளை மற்றும் நரம்பியல் நிபுணர் சுப்பிரமணியன் ஆகியோர், வரும் 26ம் தேதி புதுச்சேரிக்கு வருகின்றனர். இருவரும், ராஜிவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை பின்புறம் அமைந்துள்ள தி பாஷ் மருத்துவமனையில், 26ம் தேதி மாலை 5:00 மணி முதல், இரவு 9:00 மணி வரை, மருத்துவ ஆலோசனை வழங்குகின்றனர்.வயிற்று வலி, வயிற்றில் கட்டி, செரிமான மண்டலத்தில் ரத்தப்போக்கு, குடல் நுண்ணுயிர் அழற்சி, பித்தப்பை கற்கள், வாந்தி, எடை இழப்பு, குடலிறக்கம் ஆகிய பிரச்னைகளுக்கு, இரைப்பை மற்றும் குடல் அறுவை சிகிச்சை நிபுணர் பாஸ்கரன் ஆலோசனை வழங்குகிறார்.மேலும், வயிற்றுபுண், உடல் பருமன், புற்றுநோய், உணவுகுழாய், வயிறு, பெருங்குடல், மலக்குடல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு, ஆலோசனை வழங்க உள்ளார்.மூளை, நரம்பியல் சிகிச்சை நிபுணர் சுப்பிரமணியன், தலைவலி, வலிப்பு நோய், பார்கின்சன்ஸ், பக்கவாதம், பார்வை குறைபாடு, முகம், கழுத்து, முகுது நரம்பு கோளாறுகள், காது கேளாமை, காதுகளில் சத்தம் வருதல் ஆகிய பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்க உள்ளார். மேலும், மூளை கட்டிகள், உடல் உறுப்புகளின் பலவீனம், மறதி, முடக்குவாதம், உடல் நடுக்கம், அசாதாரண இயக்கங்கள், குடும்ப வரலாற்றில் பக்கவாத நோய், உயர் ரத்த அழுத்த பிரச்னை இருப்பவர்களுக்கு ஆலோசனை வழங்குகிறார். முந்தைய மருத்துவ பதிவுகள் ஏதேனும் இருந்தால், அவசியம் கொண்டு வர வேண்டும். முகாமிற்கு வர முன் பதிவு அவசியம். ஆலோசனை கட்டணம்-300 ரூபாய். முன்பதிவுக்கு 93840-83062,98412-68500 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
Advertisement