தங்கம் விலையானது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பார்க்கும்போது, ஓட்டுமொத்த நோக்கில் அதிகரித்தே காணப்படுகிறது. இது அவ்வப்போது சரிவினைக் கண்டு இருந்தாலும், மொத்தத்தில் நடப்பு ஆண்டில் சுமார் 15% மேலாக அதிகரித்தே காணப்படுகிறது.
இதற்கிடையில் பெரும் ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் ஆபரணத் தங்கத்தின் விலையும் உச்சம் தொட்டே காணப்படுகிறது.
தொடர்ந்து உக்ரைன் – ரஷ்யா இடையேயான பிரச்சனைகளுக்கு மத்தியில் சர்வதேச அளவில் சப்ளை சங்கிலியில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு பொருட்களின் விலை விகிதமானது வரலாறு காணாத உச்சத்தினை எட்டியுள்ளது.
ரஷ்ய பணக்காரர்களுக்கு செக் வைத்த அமெரிக்கா.. எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!
விலை எப்படியிருக்கும்?
அவற்றில் குறிப்பாக திரவத் தங்கம் என்றழைக்கப்படும் கச்சா எண்ணெய் விலையானது பலமான ஏற்றம் கண்டு வருகின்றது. இது சர்வதேச அளவில் பணவீக்கத்தினை ஊக்கப்படுத்தி வருகின்றது. இதன் காரணமாக தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், விலை இன்னும் அதிகரிக்கலாம் என்றே நிபுணர்கள் கணித்து வருகின்றனர். குறிப்பாக உக்ரைன் பிரச்சனையானது முதலீட்டு ரீதியாக தங்கத்தின் தேவையினை ஊக்குவிக்கிறது.
தொடரும் தள்ளுபடி
இப்படி தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலைக்கு மத்தியில், டீலர் தங்கத்திற்கான சலுகையினை தொடர்ந்து வருகின்றனர். இது தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலையானது தேவை குறைய வழிவகுக்கலாம் என்ற அச்சத்தின் மத்தியில் குறைக்கப்பட்டு வருகின்றது. கடந்த வாரத்தில் தங்கம் விலைக்கு அதிகபட்சமாக அவுன்ஸுக்கு 77 டாலர்கள் வரை தள்ளுபடி வழங்கப்பட்ட நிலையில், நடப்பு வாரத்தில் 45 டாலர்களாக குறைந்துள்ளது என ராய்ட்டர்ஸ் தரவுகள் கூறுகின்றன. எனினும் தள்ளுபடி தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருவது மிக நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.
தள்ளுபடி ஏன்?
இந்தியாவில் தற்போது தங்கத்திற்காக இறக்குமதி வரி 10.75%+ ஜிஎஸ்டி வரி 3% என விதிக்கப்படுகிறது. கடந்த வார இறுதியில் சற்றே வேகமிழந்த தங்கம் விலையானது 10 கிராமுக்கு 51,475 ரூபாய் என்ற லெவலில் முடிவடைந்தது. இதன் சமீபத்திய உச்சம் 55558 ரூபாயாகும். இதே வரலாற்று உச்சம் 56,200 ரூபாயாகும். தொடர்ந்து தங்கம் விலையானது அவ்வப்போது சரிவினைக் கண்டாலும் தொடர்ந்து ஏற்றம் காணவே செய்கிறது. இதற்கிடையில் இதனுடன் இறக்குமதி வரி+ ஜிஎஸ்டி வரியும் சேர்க்கும்போது இன்னும் அதிகரிக்கலாம். இதனால் தேவையானது குறையலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதற்கிடையில் தான் தள்ளுபடியானது தொடர்ந்து கொண்டுள்ளது.
ஆபரணத் தங்கம் விலையில் மாற்றமில்லை
கடந்த வாரத்தில் சர்வதேச சந்தையில் விலை பெரியளவில் ஏற்ற இறக்கம் இருந்தாலும், அது ஆபரணத் தங்கத்தின் விலையில் பெரியளவில் எதிரொலிக்கவில்லை எனலாம். இது தொடர்ந்து தள்ளுபடியானது கொடுக்கப்பட்டு வரும் நிலையில், விலையானது பெரியதாக அதிகரிக்கப்படவில்லை. எனினும் தற்போது கொடுக்கப்பட்ட தள்ளுபடியானது தொடர்ந்து சர்வதேச சந்தையில் விலை அதிகரிக்கும்பட்சத்தில் கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாகவே பார்க்கப்படுகிறது. ஆக தேவையிருக்கும் பட்சத்தில் தங்கத்தினை வாங்கி வைக்கலாம்.
அதிகரிக்கலாம்
கடந்த வார தொடக்கத்தில் அமெரிக்க மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்த நிலையில், தங்கம் விலையானது பலத்த சரிவினைக் காண்டது, இது வட்டி அதிகரிப்பால், டாலர் மதிப்பு ஏற்றம், பத்திர சந்தை ஏற்றம் என பல காரணிகளுக்கு மத்தியில், வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் குறைய வழிவகுத்தது. ஆனால் தொடர்ந்து உக்ரைன் – ரஷ்யா பதற்றம் அதிகரித்துக் கொண்டே உள்ள நிலையில் அது நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு சாதகமாக அமையலாம்.
gold price discounts continue to be in India amid fall price
gold price discounts continue to be in India amid fall price/தங்கம் விலையில் தொடரும் தள்ளுபடி.. ஏன்.. இது சரியான வாய்ப்பா?