தங்கம் விலை இன்றும் சரிவு தான்.. எவ்வளவு விலை குறைந்திருக்கு.. இனியும் விலை குறையுமா?

தங்கம் விலையானது தொடர்ந்து பல்வேறு காரணிகளுக்கும் மத்தியில் இன்று சற்று சரிவில் காணப்படுகின்றது.

இந்த சரிவானது மீண்டும் இப்படியே தொடருமா? அல்லது மீண்டும் ஏற்றத்தினைக் காணுமா? அடுத்து என்ன செய்யலாம். நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

தங்கத்தின் விலையினை தொடந்து அதிகரிக்கும் விதமாக சர்வதேச காரணிகள் பலவும் சாதகமாகவே உள்ளன. குறிப்பாக ரஷ்யா – உக்ரைன் பிரச்சனையானது இன்று வரையில் முடிந்தபாடாக இல்லை. மாறாக அதிகரித்து கொண்டே தான் செல்கின்றது. தொடர்ந்து 26 நாளாக நீடித்து வரும் தாக்குதலானது, நாளுக்கு நாள் உக்கிரமடைந்து கொண்டே தான் வருகின்றது.

200 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. இதுதான் காரணமா..!!

அதிகரிக்கும் பதற்றம்

அதிகரிக்கும் பதற்றம்

சொல்லப்போனால் உக்ரைனின் மரியுபோலை கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருவதாகவும், சூப்பர் சோனிக் ஏவுகணை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல்களை நடத்தியும் வருகின்றது.தொடர்ந்து பல ஆயிரம் மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறிய வண்ணம் உள்ள நிலையில், பலரும் இறந்திருக்கலாம் என கூறப்படுகின்றது. இதற்கிடையில் ரஷ்யா, உக்ரைன் வீரர்களை சரணடைய வேண்டும் என எச்சரித்து வருகின்றது. அப்படி செய்யாவிடில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்து வருகின்றது. இதனால் இனி உக்ரைனில் அடுத்தடுத்து என்ன பிரச்சனைகள் நடக்குமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.

அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை

அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை

ரஷ்யா ஒரு புறம் எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில், மறுபுறம் உக்ரைன் பிரதமர் நாங்கள் சரணடைய மாட்டோம் என பதிலடி கொடுத்துள்ளார். மொத்தத்தில் இதனால் இவ்விரு நாடுகளுக்கு இடையேயான பதற்றமானது மேலும் தொற்றிக் கொண்டுள்ளது. இப்போர் பதற்றத்தின் மத்தியில் மக்கள் உணவு என அத்தியாவசிய பொருட்கள் எதுவும் கிடைக்காமல் தவித்து வருவதாகவும் கூறப்படுகின்றது. ஆக இந்த நெருக்கடியான நிலைக்கு மத்தியில் இப்போதைக்கு சமாதானம் ஏற்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ரூ.4100-க்கு மேல் சரிவு
 

ரூ.4100-க்கு மேல் சரிவு

இந்திய சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று அதிகரித்து 51,428 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது. எனினும் 10 கிராமுக்கு முந்தைய வாரத்தில் அதிகபட்சமாக 55,558 ரூபாயாக உச்சம் தொட்டது. ஆக அதனுடன் ஒப்பிடும்போது 4,100 ரூபாய்க்கு மேலாக சரிவினைக் கண்டு காணப்படுகின்றது. இதே தங்கத்தின் வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 4700 ரூபாயாக்கு மேலாக சரிவில் காணப்படுகின்றது. நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் விரைவில் வரலாற்று உச்சத்தினை உடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நினைக்கும் வர்த்தகர்களுக்கு இது சரியான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் அடுத்த முடிவு?

ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் அடுத்த முடிவு?

எதிர்பார்ப்பினை போலவே அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் கூட்டத்தில், 2018ம் ஆண்டுக்கு பிறகு 25 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், வரவிருக்கும் கூட்டத்திலும் இந்த விகிதமானது தொடர்ந்து அதிகரிக்கலாம் என்ற பெருத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இந்த ஆண்டுக்குள் இன்னும் பல முறை வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இது மத்திய வங்கியானது பணவீக்கத்தினை கட்டுக்குள் வைக்க எடுத்த முக்கிய நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.

நீண்ட கால இலக்கு

நீண்ட கால இலக்கு

தங்கம் விலையானது விரைவில் அதன் வரலாற்று உச்சத்தினை உடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து ஏற்கனவே பல நிபுணர்கள் கணித்துள்ளனர். இதற்கிடையில் சர்வதேச சந்தையில் 2500 டாலர்களை தொடலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். தங்கத்திற்கு எதிராக பல காரணிகள் இருந்தாலும், உக்ரைன் – ரஷ்யா பிரச்சனைக்கு மத்தியில் நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்ற உணர்வு அதிகம் உள்ளது.

பத்திர சந்தையும் ஏற்றம்

பத்திர சந்தையும் ஏற்றம்

அமெரிக்காவின் பத்திர சந்தையானது தொடர்ந்து ஏற்றத்தினை கண்டு வரும் நிலையில், அதுவும் டாலரின் மதிப்பு இன்னும் ஏற்றம் காண வழிவகுத்துள்ளது. இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுத்துள்ளது. இதனால் தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடரும் பட்சத்தில் இன்னும் தங்கம் விலையில் அழுத்தம் இருக்கலாம் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

பணவீக்கம் Vs தங்கம்

பணவீக்கம் Vs தங்கம்

தொடர்ந்து உக்ரைன் பிரச்சனைக்கு மத்தியில் கச்சா எண்ணெய் விலையானது அதிகரித்து வருகின்றது. இது மேற்கொண்டு பணவீக்கத்தினை தூண்டலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பணவீக்கத்திற்கு எதிராக சிறந்த ஹெட்ஜிங் ஆக பார்க்கப்படும் தங்கத்தின் விலையானது, நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

பங்கு சந்தைகள் உச்சம்

பங்கு சந்தைகள் உச்சம்

வட்டி விகிதம் அதிகரிப்பின் எதிரொலியாக சர்வதேச பங்கு சந்தைகள் பலவும் இன்று ஏற்றத்திலேயே காணப்படுகின்றன. இது வட்டியில்லா முதலீடான தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என்றாலும், பல்வேறு காரணிகளும் தங்கத்தினை ஊக்குவிக்கும் விதமாகவே உள்ளன. இதன் காரணமாக நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

டெக்னிக்கல் என்ன சொல்கிறது?

டெக்னிக்கல் என்ன சொல்கிறது?

சர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் தினசரி கேண்டில், 5 மணி நேர கேண்டில், வார கேண்டில் என அனைத்தும் தங்கம் விலை சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. எனினும் மீடியம் டெர்மில் கட்டாயம் ஸ்டாப் வைத்து வர்த்தகம் செய்வது நல்லது. இதுவே நீண்டகால நோக்கில் வாங்கி வைக்கலாம். எனினும் உக்ரைன் – ரஷ்யா இடையேயான போக்கு உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றது.

சர்வதேச சந்தையில் தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தற்போது சற்று குறைந்து 1927.90 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று அழுத்தம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

சர்வதேச சந்தையில் வெள்ளி

சர்வதேச சந்தையில் வெள்ளி

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை சற்று ஏற்றத்திலேயே காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு சற்று அதிகரித்து, 25.230 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை காட்டிலும், இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச விலை, குறைந்தபட்ச விலை என எதனையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் வெள்ளி விலையானது சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகிறது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம்சற்று குறைந்தே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு சற்று குறைந்து, 51,428 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 240 ரூபாய் அதிகரித்து, 68,116 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலையும் இன்று சற்றே குறைந்து காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 9 ரூபாய் குறைந்து, 4796 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 72 ரூபாய் குறைந்து, 38,368 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று குறைந்தே காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, 5232 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, 41,856 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 52,320 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலையும் இன்று சற்று சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 0.20 பைசா அதிகரித்து, 72.50 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 725 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 200 ரூபாய் அதிகரித்து, 72500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியிலும், டாலர் மதிப்பு, வட்டி விகிதம் அதிகரிப்பு என பல்வேறு காரணிகளுக்கு மத்தியில், இன்று சற்று தடுமாற்றதினையே கண்டுள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதுவே நீண்டகால நோக்கில் வாங்கி வைக்கலாம். இதே ஆபரண தங்கத்தினை பொறுத்தவரையில் நீண்டகால நோக்கில் தேவை என்பது அதிகரிக்கவே செய்யும் என்பதால், தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

gold price on march 21st 2022: gold prices trade flat, silver also trade nearly in Rs.68,000

gold price on march 21st 2022: gold prices trade flat, silver also trade nearly in Rs.68,000/ தங்கம் விலை இன்றும் சரிவு தான்.. எவ்வளவு விலை குறைந்திருக்கு.. இனியும் விலை குறையுமா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.