தங்கம் vs ரியல் எஸ்டேட்; சிறந்த முதலீடு எது?

Is real estate a better investment option than gold? Find out: ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு மாற்றுவதால், தங்கம் எப்போதும் இந்திய குடும்பங்களுக்கு விருப்பமான முதலீடாக இருந்து வருகிறது. தங்கத்தின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், விரும்பிய அளவுகளில் முதலீடு செய்து கொள்ளலாம். நீங்கள் ரூ 1000 முதல் ரூ 1 கோடிக்கும் மேல் கூட முதலீடு செய்யலாம், தங்கம் அனைவருக்கும் கிடைக்கூடியது. மேலும், தங்கம் எளிதாக பணமாக்க கூடியது.

இருப்பினும் முதலீட்டு நோக்கங்களுக்காக ரியல் எஸ்டேட் அதிக மதிப்பெண்களைப் பெறுகிறது, ஆனால் தங்கத்துடன் ஒப்பிடுகையில், ரியல் எஸ்டேட்டுக்கு பெரிய நிதி தேவைப்படுகிறது மற்றும் வாங்குபவர் நீண்ட காலம் வைத்திருக்கும் சக்தியைக் கொண்டிருக்க வேண்டும். ரியல் எஸ்டேட் ஒரு கவர்ச்சிகரமான நீண்ட கால முதலீட்டு விருப்பமாக இருக்கலாம், அங்கு சொத்து மதிப்பு காலப்போக்கில் அதிகரிக்கிறது. எனவே, சரியான முறையில் அணுகினால், ரியல் எஸ்டேட் உங்களுக்கு நம்பமுடியாத லாபத்தை அளிக்கும்.

தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் இடையே பொதுவான ஒன்று என்னவென்றால், இரண்டுமே இந்திய முதலீட்டாளர்களுக்கு, வலுவான நம்பகத்தன்மை மற்றும் நிலையான தன்மையுடன் கூடிய மதிப்பைக் கொண்டுள்ளன. நீங்கள் முதலீடு செய்வதற்கு கணிசமான தொகை இருந்தால், உங்கள் பணத்தை எங்கு செலவிடுவது என்பதை எவ்வாறு தேர்வு செய்வது?

ரியல் எஸ்டேட் தங்கத்தை விட சிறந்ததாக உள்ளதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதால், ரியல் எஸ்டேட், முதலீடுகளுக்கு எல்லா நாட்களிலும் சிறந்த பரிந்துரையாக உள்ளது.

குறிப்பிடத்தக்க வருமானம்

ரியல் எஸ்டேட் கூடுதல் வரிச் சலுகைகளுடன் வழக்கமான வருமானத்தை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளது. குடியிருப்பு அல்லது வணிகம் வளாகங்கள் மூலம் ரியல் எஸ்டேட் ஆனது, தங்க முதலீடுகள் செய்ய முடியாத மாதாந்திர வாடகை வடிவத்தில் முதலீட்டாளர்களுக்கு குறிப்பிடத்தக்க வருமானத்தை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளது.

வருவாய் விகிதம்

அதிகரித்து வரும் வாடகை உயர்வால், ரியல் எஸ்டேட் ஆண்டு வருமானத்தில் 15 சதவீதம் வரை கொடுக்கலாம் என்று கடந்த கால வரலாறு கூறுகிறது. சந்தை மற்றும் பொருளாதாரத்துடன் சொத்து மதிப்பு மேம்படும். மறுபுறம், தங்கம் பணவீக்கத்திற்கு எதிராக பாதுகாக்கப் பயன்படுகிறது, அதாவது தங்கத்தில் இருந்து வரும் வருமானம் பணவீக்கத்திற்கு ஏற்ப உள்ளது, இது அனைத்து அரசாங்கங்களாலும் குறைவாக நோக்கப்படுகிறது. மேலும், உங்கள் பணமதிப்பு குறையும்போது, உங்களுக்கு தங்கம் கைக் கொடுக்கிறது.

நிலையற்ற தன்மை மற்றும் ஆபத்து

ரியல் எஸ்டேட் என்பது மிகவும் நிலையான முதலீட்டு விருப்பமாகும், இது குறைந்த அபாயங்களுடன் வருகிறது. சொத்து உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாப்பதன் மூலம் மன திருப்தியைத் தருகிறது. மறுபுறம், தங்கம் ஒரு பண்டமாகும், இது பங்குச்சந்தைகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது. இது அதிக ஏற்ற இறக்கம் மற்றும் திருடப்படும் அபாயத்துடன் வருகிறது.

இதையும் படியுங்கள்: ஆதார் கார்டில் போட்டோ பிடிக்கலையா? ஈஸியா மாத்திக்கலாம்; சிம்பிள் ஸ்டெப்ஸ்

மதிப்பு சேர்க்கும் செலவுகள்

தங்கம் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றப்படுவதைப் போலன்றி, சொத்து பராமரிப்பு மற்றும் புதுப்பித்தல் செலவை ஏற்படுத்துகிறது என்று ஒருவர் வாதிடலாம். இருப்பினும், இந்த செலவு உங்கள் சொத்தை மதிப்பு கூட்டுவது மட்டுமல்லாமல், வரிவிதிப்பு நன்மைகளையும் பெற உங்களை அனுமதிக்கிறது.

நீண்ட கால மதிப்பு உருவாக்கம்

ரியல் எஸ்டேட்டின் மதிப்பு ஆனது எவ்வளவு காலத்திற்கு சொத்தை வைத்திருக்கிறோமோ அவ்வளவு உயரும் என்பதை புரிந்துக்கொள்ள பெரிய அறிவு தேவையில்லை. நீங்கள் நிலத்தை உருவாக்க முடியாது என்பதாலும், அதிகரித்து வரும் மக்கள்தொகையுடன், தேவையும் அதிகரிக்கிறது, இது இறுதியில் விலை உயர்வுக்கு வழிவகுக்கிறது. மறுபுறம், தங்கத்தை டிஜிட்டல் வடிவத்திலும் வாங்கலாம். இது திருடப்படும் அபாயத்தைக் குறைக்கலாம், ஆனால் இன்னும் ஒரு அருவச் சொத்தாக உள்ளது.

பொருளாதாரத்திற்கு உதவுகிறது

ரியல் எஸ்டேட்டிற்கு பெரிய நிதி தேவைப்படலாம், ஆனால் பல துறைகளின் உயிர்வாழ்வு அதை சார்ந்துள்ளது. கடன் சேவையிலிருந்து, சிமென்ட், வீட்டு நிதி, கட்டுமானப் பொருட்கள் மற்றும் பல பொருட்கள் ரியல் எஸ்டேட்டை நம்பியுள்ளன. இது பெருமளவிலான முறைசாரா மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்கி, பொருளாதாரத்திற்கு பெருமளவில் சேவை செய்கிறது.

வரி நன்மைகள்

ரியல் எஸ்டேட்டில் முதலீடு பல வரிச் சலுகைகளுடன் வருகிறது.

எனவே, ரியல் எஸ்டேட் முதலீடு என்பது பாதுகாப்பான முதலீடு மட்டுமல்ல, நீங்கள் அதை வாடகைச் சொத்தாகப் பயன்படுத்தினால், வழக்கமான வருமானத்தை ஈட்டிக் கொண்டிருக்கும் போதே, குறிப்பிட்ட காலப்பகுதியில் சிறந்த வருமானத்தையும் ஈட்ட முடியும். அருமையான வரிச் சலுகை போன்ற பல காரணங்களுக்காக இது ஒரு சிறந்த முதலீட்டுத் தேர்வாகும், மேலும் செல்வம் மற்றும் சொத்துக்களை உருவாக்க நீங்கள் அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கட்டுரையாளர்: அன்னுஜ் கோயல், தலைவர் & எம்.டி., கோயல் கங்கா டெவலப்மென்ட்ஸ்

குறிப்பு: இவை ஆசிரியரின் தனிப்பட்ட கருத்துக்கள். எந்தவொரு முதலீட்டையும் செய்வதற்கு முன் வாசகர்கள் தங்கள் நிதி ஆலோசகரை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.