தனுஷை பிரிந்ததை தொடர்ந்து தனது வேளைகளில் படு பிசியாக ஈடுபட்டு வருகிறார் ஐஸ்வர்யா. அண்மையில் கொரோனா தொற்றில் இருந்து மீண்ட இவர், மீண்டும் உடல்நலக் குறைவு காரணாமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அண்மையில் ஐஸ்வர்யாவின் ‘
முசாபிர்
‘ ஆல்பம் பாடலும் வெளியானது..
இந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் பரஸ்பரம் பிரிய உள்ளதாக அண்மையில் அறிவித்தது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.
விவாகரத்து அறிவிப்பிற்கு பிறகு ஐஸ்வர்யா மியூசிக் ஆல்பம் இயக்கும் வேளைகளில் இறங்கினார். இதற்காக ஐதராபாத்தில் தங்கி பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் ஐஸ்வர்யாவின் பயணி ஆல்பம் பாடல் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இதனை தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும், மற்ற மொழிகளில் மோகன்லால், மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் வெளியிட்டனர்.
‘மாஸ்டர்’ பட நடிகையை படுக்கைக்கு அழைத்த பேராசிரியர்: சௌந்தர்யா செய்த காரியம்..!
ஐஸ்வர்யாவின் ‘பயணி’ ஆல்பம் பாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்துக்கள் தோழி என பதிவிட்டு அதிர்ச்சி கொடுத்திருந்தார்
தனுஷ்
. அவரின் பதிவிற்கு ஐஸ்வர்யாவும் நன்றி தெரிவித்திருந்தார். இந்நிலையில் ‘பயணி’ ஆல்பம் பாடலை தொடர்ந்து இந்தி படம் ஒன்றை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார் ஐஸ்வர்யா. இதனை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
Aishwarya Instagram
இதனையடுத்து பலரும் ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துக்கள் கூற, இயக்குனரும் தனுஷின் அண்ணனுமான செல்வராகவனும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதே போல் அவரது மனைவி கீதாஞ்சலியும் வாழ்த்து கூறியுள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ள ஐஸ்வர்யா, நன்றி குரு என செல்வராகவனை குறிப்பிட்டுள்ளார்.