தமிழக சட்டப்பேரவையில் கடந்த 18ஆம் தேதி 2022 -2023 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.19ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. காலை 10 மணிக்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும். அப்போது முன்னாள் உறுப்பினர்கள் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்படும்.
இதையடுத்து, கேள்வி நேரம் நடைபெறும். தொடர்ந்து பொது மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதங்கள் தொடங்கும். நாளையும், நாளை மறுநாளும் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெறும். இதையடுத்து வருகின்ற 24ம் தேதி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் ஆகியோர் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்து உரையாற்றவுள்ளார்.