மேகதாதுவில் புதிய அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டபேரவையில் தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தனது டுவிட்டரில், மேகதாது திட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சட்ட விரோதம் என்றும், ஒரு மாநிலம் மற்றொரு மாநிலத்தின் உரிமையை பறிக்க நினைப்பது சட்ட விரோதம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த முடிவை கர்நாடக அரசும், மக்களும் வன்மையாக கண்டிப்பதாகவும், காவிரி ஆணைய முடிவின்படி தமிழகத்துக்கு 177.25டி.எம்.சி தண்ணீர் வழங்கிய பின் மீதம் உள்ள தண்ணீரை உரிமை கோர கர்நாடகாவுக்கு உரிமை உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்ம்
தமிழக அரசு மேகதாது விஷயத்தில் என்ன அரசியல் நிலைப்பாடு எடுத்தாலும் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் கர்நாடகா உறுதியாக உள்ளதாகவும், மேகதாது திட்டத்தை நிறைவேற்ற கர்நாடக அரசு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கும் என்றும் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.