தாலிக்கு தங்கம் திட்டம் மாற்றம் – முதல்வர் விளக்கம்!!

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை மாற்றியமைத்தது குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

பெண்களுக்கு கல்விதான் நிரந்தர சொத்து என்பதால் திருமண உதவித் திட்டம் மாற்றியமைக்கப்பட்டது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மாற்றப்பட்டது குறித்து அ.தி.மு.க உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளிக்கும் விதமாக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் உயர் கல்வி உறுதித் திட்டம் மூலம் ஆண்டுக்கு ஆறு லட்சம் மாணவிகள் பயன்பெறுவர்.

mks

பெண்களுக்கு கல்வி தான் நிரந்தர சொத்து அதனால் தான் திருமண உதவித் திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. திருமணம் என்ற தகுதிக்கு முன்னாள் கல்வி என்ற நிரந்தர சொத்து வேண்டும். சமூக நிதி, பெண் கல்வி, வெளிப்படைத்தன்மை அடிப்படையில் திட்டம் மாற்றப்பட்டுள்ளது. மேலும் பெண்ணுரிமை என்ற அடிப்படையில் திருமண உதவி திட்டத்தை மாற்றியமைத்துள்ளோம்.

திருமண உதவித்திட்டம் மூலம் ஆண்டுக்கு 1 லட்சம் பேர் மட்டுமே பயனடைந்தனர். அதிலும், பயனாளிகளுக்கு தங்க நாணயம் வாங்குவதில் முறைகேடு என 43 வழக்குகள் லஞ்ச ஒழிப்புத்துறையில் பதிவாகியுள்ளன.

மேலும், இந்த திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது தெரியவந்தது. இத்திட்டத்தில் அ.தி.மு.க ஆட்சியில் நடந்த முறைகேடுகளை இதற்குமேல் கூறி திருமண உதவி திட்டத்தை கொச்சைப்படுத்த விரும்பவில்லை.” எனத் தெரிவித்தார்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.