திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை ஆன்லைனில் வெளியிடப்பட்டது.
திங்கள் முதல் புதன்கிழமை வரை தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டன. வார இறுதி நாட்களான வியாழன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக 5 ஆயிரம் டிக்கெட்டுகள் என 30 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன.
மொத்தம் 8,40,000 தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் இன்று வெளியிடப்பட்டது. டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட 1 மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தது.
மே, ஜூன் மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகள் நாளையும், நாளை மறுதினமும் வெளியிடப்படுகிறது.
தற்போது ரூ.300 ஆன்லைன் டிக்கெட், இலவச தரிசனம் மற்றும் விஐபி பிரேக் தரிசனம் உள்ளிட்டவைகளில் தினமும் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
இதேபோல் கல்யாண உற்சவம் தோமாளை சுப்ரபாதம் உள்ளிட்ட சேவைகளுக்கான டிக்கெட்டுகள் நேற்று காலை ஆன்லைனில் வெளியிடப்பட்டது.
திருப்பதியில் நேற்று 72,265 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 34,517 பேர் முடிகாணிக்கை செலுத்தினர்.ரூ 4.59 கோடி உண்டியலில் காணிக்கையாக செலுத்தினர்.