மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள ராஜீவ்காந்தி விலங்கியல் பூங்கா, கொரோனா கட்டுப்பாடுகல் முடிவடைந்து பொதுமக்கள் பார்வைக்காக 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக இந்த பூங்கா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டிருந்தது. பின்னர் அடுத்தடுத்த அலைகலில் கொரோனா தாக்குதல் ஏற்பட்டதால் அது திறக்கப்படாமலேயே இருந்தது. இந்நிலையில் தற்போது இந்திய அளவில் கொரோனாவின் தாக்கம் குறைந்ததையடுத்து ராஜீவ்காந்தி விலங்கியல் பூங்கா திறக்கப்பட்டு, பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இரு ஆண்டுக்குப் பிறகு திறக்கப்பட்டதால், ஒரே நாளில் 12ஆயிரத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டு சென்றதாகவும் 63 வகைகளை சேர்ந்த 440 விலங்குகள் இந்த பூங்காவில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய செய்தி: யாழ்ப்பாணம் சென்ற இலங்கை பிரதமர் ராஜபக்சவுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
