நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தேயிலை தோட்டங்களில் காட்டு யானைகள் குட்டியுடன் முகாமிட்டுள்ள காட்சிகள் வெளியாகியுள்ளன.
வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதன் காரணமாக நீர் ஆதாரங்களை தேடி காட்டு யானைகள் படையெடுத்து வரும் நிலையில், கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முள்ளூர் பகுதியில் தேயிலை தோட்டங்களில் குட்டியுடன் யானைகள் உலா வருகின்றன.
இரவு நேரங்களில் சாலையில் யானைகள் உலா வருவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாவதாக கூறப்படும் நிலையில், யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.