நீரின்றி அமையாது உலகு. இன்று உலக தண்ணீர் தினம்| Dinamalar

பூமியில் வாழும் அனைத்து உயரினங்கள் மற்றும் தாவரங்களுக்கு தண்ணீர் அவசியம். இதன் முக்கியத்துவத்தை அறிந்த வள்ளுவர் நீரின்றி அமையாது உலகு என்கிறார். தண்ணீர் அவசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 1993 முதல் மார்ச் 22ம் தேதி உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. தண்ணீர்: பருவநிலை மாற்றம் என்பது இந்தாண்டு மையக்கருத்து.

பூமியில் நிலப்பகுதி 30 சதவீதம். மீதமுள்ள 70 சதவீதம் நீர்பரப்பு தான். ஆனால் இந்த70 சதவீத நீர் பரப்பளவில் 97.5 சதவீதம் கடலில் இருக்கும் உப்பு நீர். மீதியுள்ள 2.5 சதவீத அளவிற்கே நிலத்தடிநீர் உள்ளது. இதிலும் குறி்ப்பிட்ட சதவீதம் பனிக்கட்டிகள் உள்ளன.

மீதி தண்ணீரை தான் உலக மக்கள் அனைவரும் பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர். ஆனால் உயரும் வெப்பநிலை பருவநிலை மாற்றம் காடுகளின் பரப்பளவு குறைதல், மணல் கொள்ளை, போன்ற பல்வேறு காரணங்களால் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து விட்டது. மூன்றாம் உலகப்போர் என ஒன்று வந்தால் அது தண்ணீருக்காக தான் இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

தண்ணீரை மிக சிக்கனமாக செலவழிக்க வேண்டும். அப்போது தான் எதிர்கால சந்ததியினருக்கு தண்ணீர் இருக்கும். இதை அனைவரும் மனதில் ஏற்றிக் கொள்ள வேண்டும்.

3

உலகில் மூன்றில் ஒருவர் பாதுகாப்பற்ற குடிநீரை பருகுகிறார்.


25

வரும் 2040ல் மின்சார தேவை 25 சதவீதம் அதிகரிக்கும். இதனால் தண்ணீரின் தேவையும் 50 சதவீதம் அதிகரிக்கும்.

50

உலகளவில் 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்வுக்குள் கட்டுப்படுத்தினால் தண்ணீர் பற்றாக்குறையை 50 5சதவீதம் தடுக்க முடியும்.

74

உலகில் 74 கோடி பேர் அத்தியாவசிய தேவைக்கான தண்ணீர் இல்லாமல் பாதி்க்கப்பட்டுள்ளனர். போர்களில் இறப்பவர்களை விட பாதுகாப்பான குடிநீர் கிடைக்காமல் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகம்.


80

உலகில் 80 சதவீத நீர் மறு சுழற்சி செய்யப்படாமல் வீணாகிறது.

507

வரும் 2050 ம் ஆண்டுக்குள் 507 கோடி பேர் வசிக்கும் பகுதிகளில் ஆண்டுக்கு குறைந்தது ஒரு மாதம் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.