நாட்டில் சில பிரதேசங்களில் தற்பொழுது 100 மில்லிமீட்டருக்கு மேற்பட்ட மழை பெய்த போதிலும் மத்திய மலையக நீரேந்து பகுதிகளில் போதுமான மழை பெய்யவில்லை என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நீரேந்து பகுதிகளில் போதுமான மழை பெய்வதை எதிர்பார்க்க முடியாது என்று வளிமண்டலவியல் திணைக்கள எதிர்வு கூறல் பிரிவு பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வாரத்தில் ,இடைக்கால பருவப்பெயர்ச்சிக் காலநிலை ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இருப்பினும் நீரேந்து பகுதிகளில் மழையை மே மாதம் மாத்திரமே எதிர்பார்க்க முடியும் என்றும் திணைக்கள பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.