பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் விடிய விடிய கம்ப ஆட்டம் ஆடி மகிழ்ந்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.
இந்நிலையில், நாளை அதிகாலை முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக கோவிலில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு கோயில் முன்பு அமைக்கப்பட்ட நிலக்கம்பத்தை சுற்றிலும் ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் மேளதாளம் முழங்க கம்ப ஆட்டம் ஆடி மகிழ்ந்தனர்.
அப்போது சில பெண் பக்தர்கள் அருள் வந்து சாமி ஆடினர். பண்ணாரி அம்மனை வழிபட்ட பெண் பக்தர்கள் விடிய விடிய கோயில் முன்பு கம்ப ஆட்டம் ஆடி பக்தி பரவசம் அடைந்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM