புதுடில்லி:2022-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.
பத்ம விருதுகள் வழங்கும் விழா ராஷ்டிரபதி பவனில் இன்று நடைபெற்றது. 2022-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 128 பேருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விழாவில்2 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன் மற்றும் 54 பத்மஸ்ரீ விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
இதில் முக்கியமாக மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத்துக்கு அறிவிக்கப்பட்டிருந்த பத்ம விபூஷன் விருதை பிபின் ராவத்தின் மகள்கள் ஜனாதிபதியிடம் இருந்து பெற்றுக் கொண்டனர். காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனர் சைரஸ் பூனாவாலா உள்பட பலரும் பத்ம விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.
மேலும் இசைக் கலைஞர் பல்லேஷ் பஜந்தரி, தமிழ்நாட்டைச் சேர்ந்த சிற்பி பாலசுப்பிரமணியம், கிளாரினெட் கலைஞர் நடராஜன் உள்ளிட்டோர் ஜனாதிபதியிடம் இருந்து பத்மஸ்ரீ விருதை பெற்றுக் கொண்டனர்.
பஞ்சாபி நாட்டுப்புற பாடகர் குர்மீத் பாவா (மரணத்திற்குப் பின்), டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன், ராஜீவ் மெஹ்ரிஷி, கோவிஷீல்ட் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் சைரஸ் பூனவல்லா உள்ளிட்டோர் பத்ம பூஷன் விருதை பெற்றுக்கொண்டனர்.
மற்ற விருதுகள் மார்ச் 28-ந்தேதி நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிறது.
Advertisement