பாதுகாப்பு பணியில் முன்னாள் வீரர்களை சேர்க்க வேண்டாம்: ஒன்றிய அரசுக்கு சிஐஎஸ்எப் கடிதம்

புதுடெல்லி:  துணை ராணுவ படைகளில் ஒன்றான ஒன்றிய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்), நாட்டின் முக்கிய தொழில் நிறுவனங்கள், விண்வெளி ஆய்வு மையம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த அமைப்புகளின் பாதுகாப்பு பொறுப்பை ஏற்றுள்ளது. பாதுகாப்பு இல்லாத இதர பணிகளில் ஈடுபடுத்துவதற்காக 2 ஆயிரம் முன்னாள் ராணுவ வீரர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமித்து கொள்ளும்படி. தொழில் பாதுகாப்பு படைக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் கடந்தாண்டு அனுமதி அளித்தது.  இந்த பணிகளில் சேர்க்கப்படும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை என, அதிகப்பட்சம் 2 முறை பணி நீட்டிப்பு வழங்கவும் அனுமதி அளித்தது.  இந்நிலையில், கடந்தாண்டு மார்ச்சில் 1,700 முன்னாள் வீரர்கள் இதுபோல் நியமிக்கப்பட்டனர்.அவர்களுக்கு சப் இன்ஸ்பெக்டர்களுக்கு ₹40,000,  உதவி சப் இன்ஸ்பெக்டர், தலைமை காவலர்களுக்கு ₹25,000 சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால், இந்த நியமனத்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்று கூறியுள்ள தொழில் பாதுகாப்பு படை, ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை பணியில் சேர்க்கும் திட்டத்தை  கைவிடும்படி ஒன்றிய உள்துறை அமைச்சக்கத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.