விளாடிமிர் புடினின் முன்னாள் மனைவி லியூட்மிலா அலிக்சண்ட்ரோவ்னா கொடுத்த ஒரு பேட்டி தற்போது வைரலாகியுள்ளது.
ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் தாக்குதல் 26வது நாளாக தொடர்ந்து நடக்கிறது.
உலக நாடுகள் பலவற்றின் கண்டங்கள் மற்றும் பொருளாதார தடைகளையும் மீறி ரஷ்யா தனது வெறியாட்டத்தை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் புடினின் முன்னாள் மனைவி லியூட்மிலா அலிக்சண்ட்ரோவ்னா கொடுத்த பழைய பேட்டி தற்போது கவனம் ஈர்த்துள்ளது.
புடினுக்கும் – லியூட்மிலாவுக்கும் கடந்த 1983ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
இருவரும் கடந்த 2014ல் பிரிந்துவிட்டனர்.
அவர்களுக்கு மரியா புடினா, காட்ரினா திகோனோவா என இரண்டு மகள் உள்ளனர்.
இந்நிலையில் புடின் எழுதிய First Person என்ற புத்தகத்திற்கு முன்னர் லியூட்மிலா ஒரு பேட்டி கொடுத்திருந்தார்.
அதில், புடின் ரஷ்ய ஜனாதிபதியாக முதன் முதலில் பதவியேற்க போகிறார் என்ற செய்தியைக் கேட்டதும் தான் அதிர்ச்சியடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், அன்றைய தினம் நான் நாள் முழுவதும் அழுது கொண்டிருந்தேன்.
ஏனெனில் என் தனிப்பட்ட வாழ்க்கை முடிந்துவிட்டது என்றே தோன்றியது.
நானும் என் மகள்களும் புடினை நேரடியாக வீட்டில் பார்த்ததை விட தொலைக்காட்சியில் தான் அடிக்கடி பார்த்தோம்.
அதே சமயம் எப்போது வீட்டிற்கு வந்தாலும் மகள்களை சென்று பார்ப்பார், அந்தளவுக்கு அவர்கள் மீது புடின் அன்பு வைத்திருந்தார் என தெரிவித்துள்ளார்.