உலகத்தின் நிலைமைகளை நாம் கட்டுப்படுத்த முடியாது. நிலக்கரியின் விலையை கட்டுப்படுத்த முடியாது. எரிபொருட்களின் விலையை கட்டுப்படுத்த முடியாது. உலகில் இருக்கின்ற பொருட்களின் விலைகளையும் நாம் கட்டுப்படுத்த முடியாது என என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
எனவே பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும் நிலைமை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது குறிப்பிடத்தக்க அளவில் ஒரு நெருக்கடி மிக்க கஷ்டமான காலமாக இருக்கின்றது. முழு உலகமும் இந்த நிலைமையை எதிர்கொண்டு இருக்கிறது.
எனவே சகலரும் தமது கடமையை சரியான முறையில் முன்னெடுப்பது முக்கியமானது.
ஏற்றுமதியாளர்கள் தாம் பெற்றுக் கொள்கின்ற டொலர்களை உடனடியாக இலங்கை ரூபாவுக்கு மாற்றிக்கொள்வது அவசியமாகும்.
இறக்குமதியாளர்கள் அதிகளவில் பொருட்களை இறக்குமதி செய்யாமல் தேவையான அளவு இறக்குமதி செய்வது நன்றாக இருக்கும்.
அனைவரும் ஒன்றிணைந்து இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வர வேண்டும். எமது கப்பல் மூழ்கி விடாமல் பாதுகாக்க வேண்டியது அனைவரதும் கடமையாகும் என குறிப்பிட்டுள்ளார்.