மரியுபோலில் ஹைப்பர்சானிக் ஏவுகணைத் தாக்குதல் நடத்திய ரஷ்யா| Dinamalar

மரியுபோல்: உக்ரைன் நாட்டின் ரஷ்யா இருபத்தி மூன்றாவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் மரியுபோல் பகுதியிலுள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் அடைக்கலம் புகுந்த 400 உக்ரைன் குடிமக்கள் மீது ஹைபர்சானிக் ஏவுகணை ஏவப்பட்டத கூறப்படுகிறது.

ஒலியின் வேகத்தைக் காட்டிலும் 5 மடங்கு அதிக வேகத்தில் சீறிப் பாய்ந்து வந்து தாக்கும் இந்த அடுத்த தலைமுறை அதிநவீன ஹைபர்சானிக் ஏவுகணை பலத்த சேதத்தை ஏற்படுத்த கூடிய ஆபத்தான ஆயுதமாகக் கருதப்படுகிறது. இதனையடுத்து உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி இதற்காக ரஷ்யா ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை இழக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.

latest tamil news

மரியுபோல் நகரை முழுவதுமாக ஆக்கிரமிக்க அங்கு வசிக்கும் உக்ரைன் குடிமக்கள் பலர் கட்டாயமாக ரஷ்யாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர்களது உக்ரைன் ஆவணங்கள் சிதைக்கப்பட்ட தாகவும் முன்னதாக ஜெலன்ஸ்கி அரசு குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.