மரியுபோலை சர்வ நாசமாக்குவது ஏன்? புடினின் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை போட்டுடைத்த துணைப் பிரதமர்


  மரியுபோல் மீதான தாக்குதல் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் தனிப்பட்ட பழிவாங்கல் நடவடிக்கை என்று உக்ரைன் துணைப் பிரதமர் Iryna Vereshchuk கூறியுள்ளார்.

உக்ரைன் மீது தொடர்ந்து 26வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, மரியுபோல் நகரில் குண்டுமழை பொழிந்து வருகிறது.

மரியுபோல் நகரில் மோதல் தீவிரமடைந்துள்ளதால், நகர மக்கள் தண்ணீர், மின்சாரமின்றி தவித்துவருகின்றனர்.

மரியுபோல் சரணடைந்தால் மக்களை வெளியேற்ற மற்றும் நகருக்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல மனிதாபிமான வழிதடங்களை திறப்பதாக ரஷ்ய உக்ரைனுக்கு கோரிக்கை விடுத்தது.

எனினும், சரணடைய எங்களுக்கு விருப்பமில்லை என திட்டவட்டமாக ரஷ்யாவின் கோரிக்கை உக்ரைன் நிராகரித்துள்ளது.

இந்நிலையில், மரியுபோல் நகரம் மீதான புடினின் தனிப்பட்ட கழப்புணர்ச்சி குறித்து உக்ரைன் துணைப் பிரதமர் Iryna Vereshchuk விவரித்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு ரஷ்யா கிரிமியா தீபகற்பத்தை உக்ரைனிடம் இருந்து இணைத்த நேரத்தில், புடினால் மரியுபோல் நகரத்தை கைப்பற்ற முடியவில்லை.

2014ல் நகரத்தை கைப்பற்றத் தவறிய பிறகு, தற்போது புடின் மரியுபோல் மக்கள் மீது தனிப்பட்ட பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்.

ரஷ்யாவின் ஆலோசனையை மரியுபோல் மக்கள் ஏற்க மறுத்ததற்கு மொத்தமாக சேர்த்து வைத்து தண்டிக்கிறார்.

மனிதாபிமான பொருட்களுடன் வாகனங்கள், மரியுபோல் நகரத்தை அடைவதற்கான முயற்சிகள் தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறது.

புடின் விரும்பினால், மரியுபோல் மனிதாபிமான நடைபாதை ஏற்கனவே திறந்திருக்கும். ரஷ்யர்கள் மருத்துவமனைகளை, இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த தியேட்டர், மசூதி, தேவாலயங்களை அழிக்கிறார்கள், யாராலும் அவர்களைத் தடுக்க முடியவில்லை என Iryna Vereshchuk தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.