அப்போலோ மருத்துவமனையில் சசிகலா தான் ஜெயலலிதாவை உடனிருந்து கவனித்துக் கொண்டதாகவும், என்ன சிகிச்சை வழங்கப்பட்டது என்பது குறித்த தகவல் சசிகலாவுக்கு தான் தெரியும் எனவும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரான சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி விளக்கமளித்துள்ளார்.
ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த 75 நாட்களும் அப்போலோ மருத்துவமனைக்கு சென்று வந்ததாகவும், ஆனால், ஓரிரு நாட்கள் மட்டுமே ஜெயலலிதாவை கண்ணாடி வழியாக நேரில் பார்த்ததாகவும் இளவரசி கூறியிருக்கிறார்.
போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுடன் தங்கியிருந்த போது, அவரது தனிப்பட்ட விஷயங்கள் குறித்து தன்னிடம் பகிர்ந்து கொண்டதில்லை எனவும், 2014-ல் சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற போது, ஜெயலலிதா உடல்நலம் குன்றி, மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறியிருக்கும் இளவரசி, 2016 தேர்தலின் போது கூட ஜெயலலிதா உடல்நலம் குன்றி தான் இருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.