ரஷ்யாவில் காண்டம் விற்பனை 170% உயர்வு.. என்ன காரணம்..!

உக்ரைன் நாட்டைக் கைப்பற்றும் திட்டத்துடன் உலக நாடுகளின் எச்சரிக்கைகளை மீறி விளாடிமீர் புதின் தலைமையிலான ரஷ்யா ராணுவம் உக்ரைன் மீது போர் தொடுத்துத் தொடர்ந்து பல பகுதிகளைக் கைப்பற்றி வருகிறது.

ரஷ்யாவின் போரை நிறுத்த உக்ரைன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினாலும் பெரிய அளவிலான முன்னேற்றம் ஏற்படவில்லை.

இந்நிலையில் ரஷ்யாவில் கருத்தடை சாதனமான காண்டம் விற்பனை எப்போதும் இல்லாத வகையில் 170 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. இந்தத் திடீர் உயர்வுக்கு என்ன காரணம்..?

எல்ஐசி ஐபிஓ மே மாதத்திற்கு ஒத்திவைப்பு..? ரஷ்யா – உக்ரைன் போரால் மொத்த கதையும் மாறியது..!

ரஷ்யா - உக்ரைன் போர்

ரஷ்யா – உக்ரைன் போர்

ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்தால் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற உலகின் முன்னணி நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு தடைகளை விதித்தது. இதன் மூலம் ரஷ்யா உலக நாடுகள் உடன் வர்த்தகம் செய்ய முடியாத மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது.

கோல்டுமேன் சாச்சஸ் - மெக் டொனால்டு

கோல்டுமேன் சாச்சஸ் – மெக் டொனால்டு

இதன் வாயிலாக ரஷ்யாவில் வர்த்தகம் செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள் அடுத்தடுத்து தனது வர்த்தகத்தை மூடிவிட்டு அந்நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்தது. கோல்டுமேன் சாச்சஸ் முதல் மெக் டொனால்டு வரையில் பல நிறுவனங்கள் அடக்கம்.

Durex காண்டம்
 

Durex காண்டம்

இப்படிப் பல நிறுவனங்கள் வெளியேறினாலும் பார்மா நிறுவனங்களில் ஒன்றான பிரிட்டன் நாட்டின் Reckitt தொடர்ந்து வர்த்தகம் செய்து வருகிறது. இந்த நிறுவனம் தான் Durex காண்டம் தயாரித்து, விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் எப்போது வேண்டுமானாலும் தடை விதிக்கப்படலாம் என்ற சூழ்நிலையும் இருக்கிறது.

170 சதவீதம் உயர்வு

170 சதவீதம் உயர்வு

இந்த நிலையில் மக்கள் எதிர்காலத் தேவைக்காக அதிகளவிலான காண்டம்-களை வாங்கிக் குவித்து வருகின்றனர். இதன் வாயிலாக மார்ச் மாதத்தின் முதல் 2 வாரத்தில் மட்டும் ரஷ்யாவின் Wildberries என்னும் ஆன்லைன் ரீடைல் தளத்தில் காண்டம் விற்பனை சுமார் 170 சதவீதம் அதிகரித்துள்ளது.

Reckitt நிறுவனம்

Reckitt நிறுவனம்

மேலும் Reckitt நிறுவனத்தின் காண்டம் விற்பனை 36.6 சதவீதம் அதிகரித்துள்ளது, மேலும் சூப்பர்மார்கெட்-களில் அதிகப்படியான டிமாண்ட் காரணமாகக் காண்டம் விலை 50 சதவீதம் அதிகரிக்கப்பட்ட நிலையிலும் விற்பனையில் 30 சதவீதம் உயர்ந்துள்ளது.

இந்திய பார்மா நிறுவனங்கள்

இந்திய பார்மா நிறுவனங்கள்

ஏற்கனவே ரஷ்யாவில் இருந்து வெளியேறும் வெளிநாட்டு பார்மா நிறுவனங்களின் வர்த்தகம் இந்திய பார்மா நிறுவனங்கள் கைப்பற்றும் எனக் கூறப்படும் நிலையில், இந்தியாவில் காண்டம் ஏற்றுமதி ரஷ்யாவுக்குத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Reckitt ஆதிக்கம்

Reckitt ஆதிக்கம்

ரஷ்யாவில் ஒட்டுமொத்த காண்டம் விற்பனை சந்தையில் 90 சதவீதம் வெளிநாட்டுச் சந்தைகள் வைத்துள்ளது. இந்நிலையில் Durex, Contex, Hussar மற்றும் பிற பிராண்டு காண்டம்களைத் தயாரிக்கும் பிரிட்டன் நாட்டு நிறுவனமான Reckitt, ரஷ்ய காண்டம் விற்பனை சந்தையில் சுமார் 60 சதவீதத்திற்கும் அதிகமான பங்கைக் வைத்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Condom sales rocketed 170 percent in Russia; Know why? Britain company play dominance

Condom sales rocketed 170 percent in Russia; Know why? britain company play dominance ரஷ்யாவில் காண்டம் விற்பனை 170% உயர்வு.. என்ன காரணம்..!

Story first published: Monday, March 21, 2022, 17:21 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.