ரஷ்ய அதிபர் புதினின் புதிய உத்தரவு உக்ரைன் போர் அணு ஆயுதப் போராக மாறுமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பேரழிவு நாளுக்கு ராணுவ கமாண்டர்கள் அணு ஆயுதங்களை விமானத்தில் கொண்டு செல்லும் பயிற்சியை மேற்கொள்ளுமாறு புதின் உத்தரவிட்டு உலகையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளார்.
25 நாட்களாக நடைபெறும் உக்ரைன் யுத்தத்தில் ரஷ்யாவுக்கு பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டு 17 ஆயிரம் வீரர்களை இழந்து விட்டது. இந்த அணு ஆயுதப் பயிற்சியின் மூலம் போரின் பேரழிவு நாளை புதின் திட்டமிட்டு இருப்பார் என்று கூறப்படுகிறது.
ஆயுதம் தாங்கி ஹைப்பர் ஸோனிக் ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் யுத்தத்தில் புதின் பயன்படுத்தி ருமேனியா எல்லையருக்கில் இவானா மாகாணத்தில் பூமிக்கடியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள உக்ரைனின் ஏவுகணை கிடங்கைத் தாக்கி அழித்ததாக வந்த தகவலையடுத்து அடுத்த 24 மணி நேரம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி புதின் தமது படைகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.