வண.அதபத்துகந்தே ஆனந்த தேரருக்கு நற்சான்றிதழ் பத்திர கையளிப்பு நிகழ்வில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பங்கேற்பு…

வண.அதபத்துகந்தே ஆனந்த தேரருக்கு சத்தர்ம கீர்த்தி ஸ்ரீ தம்மரதன பிரஞானதிஸ்ஸ என்ற கௌரவ நாமத்துடன் தக்ஷின லங்காவே சமதபல சம்பன்ன பிரதம நீதிமன்ற சங்க நாயக்க பதவி வழங்கப்பட்டது.

ஸ்ரீ சன்னஸ் பத்திரம் வழங்கும் நிகழ்வு நேற்று, (20) பிற்பகல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.

வண. அத்தபத்துகந்தே ஆனந்த தேரர் ஆற்றிவரும் சாசன, மத, சமூக சேவைகளைப் பாராட்டி  சியம் மகா நிக்காயவின் மல்வத்து பீடத்தின் வண. மகா நாயக்க, அனுநாயக்க தேரர்கள் உள்ளிட்ட, நிறைவேற்று சங்க சபையினால் தேரருக்கு கௌரவ நாமத்துடன்கூடிய நாயக்க பதவி வழங்கப்பட்டுள்ளது.

நாயக்க தேரருக்கு ஸ்ரீ சன்னஸ் பத்திரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களால் கையளிக்கப்பட்டது.

விஜினி பத்திரம் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களினால் வழங்கப்பட்டது.

மல்வத்து பீடத்தின் அனுநாயக்க கலாநிதி வண.நியாங்கொட விஜிதசிறி தேரர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

பேராசிரியர் வண.கொட்டபிட்டியே ராகுல தேரர் மற்றும் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க ஆகியோர் விசேட உரையாற்றினர்.

இந்நிகழ்வில் தேரரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான நூல் மற்றும் அவர்களினால் எழுதப்பட்ட கட்டுரைகள் அடங்கிய நூல்களும் வெளியிடப்பட்டன.

58 வருடங்களாக புத்தசாசனம் நிலைத்திருக்க அளப்பரிய சேவையை ஆற்றிவரும் வண. அதபத்துகந்தே ஆனந்த தேரர், கொழும்பு 06, ஹெவ்லொக் சிட்டி சாம விகாரை, ஹக்மன பேருவேவெல ஸ்ரீ சௌகதாராம புராண விகாரை, ஹக்மன எல்லேவெல ஸ்ரீ அஸ்வத்தாராம புராண விகாரை, ஹக்மன தெனகம ஸ்ரீ முனசிங்ஹாராம விகாரை போன்ற நான்கு விகாரைகளில் பதவி வகித்துள்ளார். கொழும்பு ஆனந்தா கல்லூரியின் உதவி அதிபராகவும் நீண்டகாலம்  கடமையாற்றி ஓய்வுபெற்ற தேரர் அவர்கள், பிரபலமான தர்ம போதகராகவும் உள்ளார்.

மூன்று நிக்காயாக்களினதும் மகா சங்கத்தினர், அமைச்சர்கள், தூதுவர்கள், ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, அரச அதிகாரிகள், நிறைவேற்று சபையினர், நாயக்க தேரரின் குடும்ப உறவினர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

21.03.2022

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.