காலி – மாத்தறை வீதியில் அஹங்கமவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ரஷ்ய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (20) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தறையிலிருந்து காலி நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, லொறி ஒன்றை முந்திச் செல்ல முயன்ற சந்தர்ப்பத்தில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 38 வயதான பெண் பலத்த காயங்களுடன் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளரர்.
குறித்த விபத்து தொடர்பாக லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அஹங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.