இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தொடர்ந்து தனது வர்த்தகத்தைக் கிரீன் எனர்ஜி துறையில் விரிவாக்கம் செய்து வருவது போலவே டெக்ஸ்டைல் மற்றும் கார்மென்ட்ஸ் துறையில் விரிவாக்கம் செய்து வருகிறது. ரீடைல் வர்த்தகப் பிரிவில் பல முன்னணி பிராண்டுகளை ரிலையன்ஸ் ரீடைல் கைப்பற்றியது மறக்க முடியாது.
இந்த நிலையில் தனது டெக்ஸ்டைல் துறையை விரிவாக்கம் செய்யப் பல மாத போட்டிக்கு மத்தியில் பல வெளிநாட்டு முன்னணி பிராண்டுகளை வாடிக்கையாளர்களாகக் கொண்டு இருக்கும் சின்டெக்ஸ் நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.
தங்கம் விலையில் தொடரும் தள்ளுபடி.. ஏன்.. இது சரியான வாய்ப்பா?
சின்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
அதீத கடனிலும், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையிலும் சிக்கியுள்ள சின்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மீது NCLT அமைப்பில் வழக்கு தொடுத்து இந்நிறுவனத்திற்குக் கடன் கொடுத்தவர்கள் கைப்பற்றினர். இதன் மூலம் சின்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஏலத்திற்கு வந்தது.
4 நிறுவனங்கள் இறுதி போட்டி
சின்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தைக் கைப்பற்றப் பல நிறுவனங்கள் கடுமையாகப் போட்டிப்போட்ட நிலையில் இறுதிக்கட்டத்திற்கு 4 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டது. இதில் ரிலையன்ஸ், வெல்ஸ்பனின் ஈசிகோ டெக்ஸ்டைல்ஸ், GHCL மற்றும் Himatsingka வென்சர்ஸ் ஆகியோர் அடக்கம்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
இந்த நிலையில் சின்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடன் கொடுத்தவர்கள் விண்ணப்பங்களை ஆய்வு செய்ததில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ACRE அமைப்பு இணைந்து சமர்ப்பித்த விண்ணப்பம் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக அறிவித்தனர். இதன் மூலம் சின்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை ரிலையன்ஸ் கைப்பற்ற உள்ளது.
7,718.72 கோடி ரூபாய் நிலுவை
சின்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வங்கிகளுக்குச் சுமார் 7,718.72 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும், இந்நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ACRE அமைப்பு இணைந்து விண்ணப்பித்துள்ள தொகை மற்றும் திட்டம் குறித்து முழுமையாக அறிவிக்கப்படவில்லை. மேலும் ரிலையன்ஸ் நிர்வாகம் சின்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் வெளியேற்றுகிறது என அறிவித்துள்ளது.
வாட்டர் டாங்க் நிறுவனம்
சின்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இந்தியாவில் மிகவும் பிரபலமான வாட்டர் டாங்க் தயாரிக்கும் பிராண்டு தான். ஆனால் 2017ல் வாட்டர் டாங்க் தயாரிக்கும் வர்த்தகம் மற்றும் அனைத்து சொத்துக்களையும் சின்டெக்ஸ் பிளாஸ்டிக் டெக்னாலஜி லிமிடெட் நிறுவனத்திற்குத் தனியாகப் பிரிக்கப்பட்டது.
டெக்ஸ்டைல்ஸ் மற்றும் யார்ன்
2017ஆம் ஆண்டு வர்த்தகம் பிரிக்கப்பட்ட பின்பு சின்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் தற்போது டெக்ஸ்டைல்ஸ் மற்றும் யார்ன் (நூல்) தயாரிப்பு வர்த்தகம் மட்டுமே உள்ளது. மேலும் சின்டெக்ஸ் பிளாஸ்டிக் டெக்னாலஜி லிமிடெட் நிறுவனத்திற்கு எவ்விதமான தொடர்பும் இணைப்பும் இல்லாமல் உள்ளது.
மறுசீரமைப்பு நிறுவனத்துடன் கூட்டணி
முகேஷ் அம்பானி சின்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தைத் தனியாகக் கைப்பற்றாமல் ACRE என்னும் நிறுவன மறுசீரமைப்பு நிறுவனத்துடன் இணைந்து கைப்பற்றி உள்ளது. இதேபோல ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மற்றொரு டெக்ஸ்டைல் நிறுவனமான அலோக் இண்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனத்தை, ஜேஎம் பைனான்சியல் நிறுவனத்துடன் இணைந்து கைப்பற்றியது.
Reliance expands textile business with Sintex Industries; wins bidding offer to acquire
Reliance expands textile business with Sintex Industries; wins bidding offer to acquire வென்றது ரிலையன்ஸ்.. சாதித்துக் காட்டிய முகேஷ் அம்பானி..! #Textile