தமிழக அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாமில் ஒரேநாளில் 8,752 பேருக்கு பணி கிடைத்துள்ளது.
சென்னை வண்டலூரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் 507 நிறுவனங்கள் கலந்துகொண்ட நிலையில், 8,752 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டதாக அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
பங்கேற்ற 81 மாற்றுத்திறனாளிகளில் 31 பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 2ஆம் கட்ட நேர்முகத் தேர்வுக்கு 2,983 பேர் தகுதி பெற்றிருப்பதாகவும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது. மேலும் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு 1,576 பேர் பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டு மே மாதம் முதல் இதுவரை 334 தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டதில், 49,965 பேர் பல்வேறு துறைகளில் பணி நியமனம் பெற்றுள்ளனர். இதில் 548 பேர் மாற்றுத்திறனாளிகள் எனவும் அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ”முதல்வரை விரைவில் சந்திப்போம்” – நடிகர் சங்கத் தேர்தல் வெற்றிக்குப் பின் கார்த்தி பேட்டி
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM