133 யணிகளுடன் சென்ற சீனா ஈஸ்டர்ன் போயிங் 737 விமானம் விபத்துக்குள்ளானது. இதனால், தென் சீனாவின் குவாங்சி ஜுவாங் தன்னாட்சிப் பகுதியான தெங்சியன் கவுண்டி என்னும் மலைப்பகுதி தீ பிடித்துள்ளது; உயிரிழப்புகள் குறித்து இன்னும் தெளிவான தகவல் இல்லை.
சீனா ஈஸ்டர்ன் போயிங் 737 விமானம் தென் சீனாவின் குவாங்சி ஜுவாங் தன்னாட்சிப் பகுதியான டெங்சியன் கவுண்டியில் மலைத் தீயை ஏற்படுத்தியது.
தென்மேற்கு சீனாவில் 133 பேருடன் சென்ற சைனா ஈஸ்டர்ன் பயணிகள் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதாக உள்நாட்டு தொலைக்காட்சி CCTV செய்தி வெளியிட்டுள்ளது.
#BREAKING | போயிங் 737 ரக விமானம் தெற்கு சீனாவில் விழுந்து நொறுங்கியது; விமானத்தில் 133 பேர் இருந்ததாக தகவல் https://t.co/OVraXp6ozF | #China | #Boeing737 | #PlaneCrash | #ZeeTamilNews pic.twitter.com/ygCoyibNsS
— Zee Tamil News (@ZeeTamilNews) March 21, 2022
போயிங் 737 விமானம் குவாங்சி பிராந்தியத்தின் வுஜோ நகருக்கு அருகிலுள்ள கிராமப்புற பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாதால் மலைத் தீயை மூண்டுள்ளதாகவும், மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க | டெல்லி-தோஹா விமானம் QR579 கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது