பஞ்சாப் சட்டசபை தேர்தலில் அபாரமாக வெற்றிப் பெற்று ஆம் ஆத்மி முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. கடந்த 16-ம் தேதி சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் பூர்வீக கிராமமான கட்கர் கலனில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரமாண்ட விழாவில் பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் பதவியேற்றார்.
ஆம் ஆத்மி பிரசாரங்களின்போது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, ஒப்பந்த ஊழியர்களின் பணி முறைப்படுத்துதல் உள்பட பல்வேறு வாக்குறுதிகளை தெரிவித்தது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசுத் துறைகளில் 25,000 பணியிடங்களை நிரப்புவதாக பகவந்த் மான் அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு புதிய அறிவிப்பு வந்துள்ளது.
அதன்படி, பஞ்சாப் அரசுத் துறைகளில் ஒப்பந்தத்தின் கீழ் பணிப்புரியும் 35 ஆயிரம் ஊழியர்களின் பணி முறைப்படுத்தப்படும் என்று முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கூறியதாவது:-
பஞ்சார் அரசில் குரூப் சி மற்றும் டின் கீழ் 35 ஆயிரம் ஒப்பந்த ஊழியர்களின் பணிகளை முறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தலைமைச் செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்..
அசானி புயல் நாளை அதிகாலை மியான்மர் பகுதியில் கரையை கடக்கும் – வானிலை மையம் எச்சரிக்கை